Premgi Amaren
Premgi Amaren 
வெள்ளித்திரை

ஒருவழியாக திருமண தேதியை அறிவித்த பிரேம்ஜி... குவியும் வாழ்த்துக்கள்!

விஜி

பல ஆண்டுகளாக ரசிகர்களின் காத்திருப்புக்கு விடை கிடைத்துள்ளதாக நடிகர் பிரேம்ஜியின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களே இவருக்கு அதிக பெயர் பெற்று தந்தது.

அதாவது வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார். தற்போத் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான கோட் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.

என்னதான் அடுத்தடுத்து சினிமா வாழ்க்கை களைகட்டி வந்தாலும், குடும்ப வாழ்க்கையை மலராமலேயே வைத்திருந்தார். ஏற்கனவே புத்தாண்டு பிறந்த போது தனது எக்ஸ் பக்கத்தில், ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட் என பதிவிட்டு இருந்தர். இதனை பார்த்த ரசிகர்கள் எப்போது திருமணம் சூப்பர் என கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது திருமண தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை பிரேம்ஜி வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் தற்போது பிரேம்ஜியின் திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மிகவும் ஆடம்பரமாக இல்லாமல் இந்த பத்திரிகை பாரம்பரிய முறைப்படி காணப்படுவது ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறது. திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9 மணி முதல் 10,30 மணிக்குள் இந்த திருமணம் நடக்கவுள்ளதாகவும் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Actor premji marriage invitation

உலக அதிசயமான சீனப் பெருஞ்சுவர் தெரியும்! இந்தியப் பெருஞ்சுவரைப் பற்றித் தெரியுமா?

இந்த உணவுகளை டன் கணக்கில் சாப்பிட்டாலும் உங்களுக்கு தொப்பை போடாது! 

உடலில் நீர்ச்சத்து இல்லையென்பதற்கான அறிகுறிகள்!

நம்மிடமே இருக்கு நமக்குத் தேவையான தங்கச்சுரங்கம்!

ஊமத்துரை தஞ்சம் புகுந்த திருமயம் கோட்டை!

SCROLL FOR NEXT