Legend Saravanan
Legend Saravanan 
வெள்ளித்திரை

மாஸ் இயக்குனருடன் கைக்கோர்க்கும் லெஜெண்ட்... யார் தெரியுமா?

விஜி

லெஜெண்ட் சரவணன் பிரபல இயக்குனர் ஒருவருடன் இணையும் தகவல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். கூடிய சீக்கிரமே புதிய பட அறிவிப்பை வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போறாங்க என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் விளம்பரத்தில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்ற படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படம் கணிசமான வெற்றியையே கொடுத்த நிலையில், அடுத்த படம் நல்ல படியாக கொடுக்க வேண்டும் என இயக்குனரை தேடி வந்தார் லெஜண்ட் சரவணன்.

தற்போது தனுஷின் கொடி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, சூரியின் கருடன் உள்ளிட்ட படங்களை இயக்கி வரும் துரை செந்தில் குமார் தான் லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சூரி, சசிகுமார், ரோஷினி, பிரிகிடா, உன்னி முகுந்தன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த கருடன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கருடன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த பட ஷூட்டிங்கை சைலண்டாக தொடங்கி இருக்கிறார் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே லெஜண்ட் என்கிற பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சரவணன், தற்போது துரை செந்தில்குமார் உடன் கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், அப்படத்திற்காக லெஜண்ட் சரவணன் புது கெட்டப்பிற்கும் மாறி இருக்கிறார். கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் லுக்கில் அவர் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிறது.

சர்க்கரை: இது உணவல்ல விஷம்! 

சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 

மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனைக்கு வழிகாட்டிய குட்டிப் பறவை!

அதிவேக காற்றால் பாதிக்கப்படும் தோட்டக்கலைப் பயிர்கள்: பாதுகாப்பது எப்படி?

SCROLL FOR NEXT