Vijayakanth picture
Vijayakanth picture 
வெள்ளித்திரை

மக்கள் மனதில் என்றும் வாழும் கேப்டன்!

ராகவ்குமார்

புத்தாண்டை கொண்டாடும் இந்த நேரத்தில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும்  விஜயகாந்த் மறைந்தார் என்ற செய்தி  பேரிடியாக வந்துள்ளது. சினிமா தாண்டி சமூகம், அரசியல் என்ற பல்வேறு தளங்களில் தனது பங்களிப்பை செய்தவர் விஜய்காந்த்.

ரஜினி, கமலுக்கு  பின்னணியில் இருந்தது போல் மிகப்பெரிய இயக்குநர்கள் இவருக்கு இல்லை. போராட்டங்களும் அவமானங்களுடன் ஜெயித்தவர் கேப்டன். மதுரையை சொந்த ஊராக கொண்ட விஜய்காந்த் மதுரை  கரிமேடு பகுதியில் உள்ள ராசி ஸ்டூடியோவில் சினிமாவிற்காக முதல் புகைப்படத்தை எடுத்து கொண்டார். விஜயராஜ் என்ற இயற்பெயரை விஜயகாந்த் என்று மாற்றி கொண்டார்.

ரஜினிகாந்த் இருக்கும் போது விஜயகாந்த் எதற்குகென  சினிமாவில் கேள்வி கேட்டவர்கள் பலர். இதை தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார் விஜயகாந்த். சினிமாவில் பெரிய ஹீரோவாக உயர்ந்தாலும், திரைப்பட கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு வாய்ப்பு தந்தார். "படிச்ச புள்ளைங்களுக்கு நாம வாய்ப்பு தரவில்லை என்றால் வேற யார் தருவா? என்பார் விஜயகாந்த். RK. செல்வமணி, RV உதயகுமார், அரவிந்த ராஜ் என பல திரைப்பட கல்லூரி மாணவர்களின் வெற்றியில் விஜயகாந்த் பங்களிப்பு உள்ளது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் இறங்கி குரல் கொடுப்பவர் விஜய்காந்த். சினிமாவிலும், வெளி உலகிலும் இவரால் பயன் அடைந்தவர்கள பலர். 2005 ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்றத்திற்கு சென்றார். சட்ட மன்றதிற்கும் உள்ளேயும் வெளியேயும் ஜெயலலிதாவின் அரசியல் செயல்பாடுகளை தைரியமாக  விமர்சனம் செய்தார். எதையும் வெளிப்படையாக பேசும் குணத்தால் அரசியலில் தொடர் வெற்றிகளை பெற முடியவில்லை.         

சினிமாவில் எம். ஜி. ஆர்க்கு பிறகு ஈகை குணத்திற்காக பெரிதும் பாராட்டபடுபவர் விஜயகாந்த்.இவரை ஜாதி, மொழி என்ற அடையாளத்துடன்  அரசியல் விமர்சனம் செய்பவர்கள் உள்ளனர். ஆனால் மக்கள் இதை பொறுப்படுத்தாமல் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டு விட்டனர். சினிமாவில் மட்டும் அரிதாரம் பூசி மக்களிடையே எந்த அரிதாரமும் இல்லாமல் வாழ்ந்த கருப்பு தங்கம் விஜயகாந்த் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்திருப்பார். அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT