Get rid of dark circles
Get rid of dark circles Img Credit: Glow Recipe
அழகு / ஃபேஷன்

கருவளையங்களை நீக்க 5 சிறந்த ஹோம் மேட் நேச்சுரல் கிரீம்ஸ்!

பாரதி

அதிகமான நேரம் கண் விழித்து வேலை பார்ப்பவர்களுக்குக் கருவளையங்கள் மற்றும் கண்ணுக்கு கீழ் கோடுகள் ஏற்படுவது இப்போது வழக்கமாகிவிட்டது. இந்த சமயங்களில் திடீரென்று ஒருநாள் ஏதாவது நிகழ்ச்சிக்கு சென்றால் இந்த கருவளையங்கள் நம்முடைய மானத்தையே வாங்குகிறது. இதற்கு நிறைய கிரீம்கள் வந்துவிட்டாலும் அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இதுவே வீட்டில் செய்யும் கிரீம்கள் பயன்படுத்தினால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கருவளையங்களைப் போக்கிவிடலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் புதினா கிரீம்:

Cucumber and mint face cream

வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி அதனுடன் புதினா இலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் அதனுடன் கற்றாலை மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்டாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் கண்களுக்கு கீழ் தேய்த்து வந்தால் அந்த இடம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

அவகாடோ மற்றும் பாதாம் கிரீம்:

Avocado and almond face cream

அவகாடோவில் வைட்டமின் E மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளன. இது கண்ணுக்கு கீழ் உள்ள கோடு மறைய உதவும். மேலும் சருமம் உலராமல் இருப்பதற்கும் உதவுகிறது..

பாதாமில் உள்ள சத்துக்கள் கண்ணுக்கு கீழ் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் செல்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது.

அவகாடாவை துண்டுகளாக நறுக்கி பாதாம் எண்ணெய்யுடன் சேர்த்து அரைத்து கிரீம் செய்ய வேண்டும். பின்னர் இதனை கண்ணுக்கு கீழ் அப்ளை செய்து ஐந்து நிமிடம் கழித்து கழுவினால் கண்களுக்கு கீழ் உள்ள பகுதி எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ப்ரிம்ரோஸ் ஆயில் கிரீம்:

Coconut oil and primrose oil face cream

பொதுவாக ப்ரிம்ரோஸ் எண்ணெய் பருக்கள் மற்றும் தோல் அலர்ச்சி ஆவதிலிருந்து தடுக்கும்.

தென்காய் எண்ணெய் கண்களை மென்மையாக வைக்க உதவும்.

சுட வைத்த தேங்காய் எண்ணெய், ப்ரிம்ரோஸ் மற்றும் வைட்டமின் E கேப்சுல் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் நல்ல பலனைத் தரும்.

கெமோமில் மற்றும் ஷியா பட்டர் கிரீம்:

Chamomile and Shea Butter face cream

இவை இரண்டுமே தோல் சுருக்கம் மற்றும் கோடுகள் மறைய உதவும்.

ஷியா பட்டரை சுடவைத்த பின்னர் அதில் ப்ரிம்ரோஸ் சேர்த்து ஆரவைத்தப் பிறகு பயன்படுத்த வேண்டும். இது சருமத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.

காபி க்ரீம்:

Coffee face cream

இது கண் வீக்கம், கருவளையத்தை குறைத்து மென்மையாக வைக்க உதவும்.

காபி பவுடருடன் ஆலிவ் ஆயில் சேர்த்து 20 நிமிடங்கள் சுட வைக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் உருக வைத்த ஷியா பட்டர், வைட்டமின் E கேப்சுல், ஜோஜோபா ஆயில், காபி ஆயில், லேவண்டர் மற்றும் கெமோமில் ஆயில் சேர்த்து தினமும் இரண்டு முறை தேய்த்து வந்தால் நல்ல பலன் தரும்.

காற்றின் மாசுபாடும் அதை தடுத்து நம்மைப் பாதுகாப்பதும்!

விலை மதிப்பற்ற முட்டை ஓடும், பயன்படுத்திய காபி தூளும்!

அற்புத சத்துமிக்க பாலக்கீரை கட்லெட் செய்யலாம் வாங்க!

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT