உணவிற்கும் அழகிற்கும்...
உணவிற்கும் அழகிற்கும்... 
அழகு / ஃபேஷன்

அரிசித் தண்ணீரில் இத்தனை நன்மைகள் இருக்கா?

நான்சி மலர்

ண்டைய காலத்தில் இருந்தே அரிசி என்பது உணவிற்கும் அழகிற்கும் பிரதானமாக விளங்குகிறது.

ஆசிய மக்களுக்கு அரிசி என்பது மிகவும் முக்கியமான உணவாகும். ஜப்பானியர்களும், கொரியர்களும் அரிசியை உணவுக்கு பயன்படுத்துவதை தாண்டி அழக்குக்காகவும் பயன்படுத்தி வந்தார்கள்.

செலவே இல்லாமல் கண்ணாடி போன்ற முகப்பொலிவினை கொடுக்கவும் முடி வளர்ச்சிகாகவும்,  ஊர வைத்த அரிசியின் தண்ணீரை பயன்படுத்தினர்.

கிளின்ஸராக பயன்படும் அரிசி தண்ணீர்:

ரு கப் அரிசியை எடுத்து கொண்டு அதை இருமுறை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். இப்போது அரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி நிரப்பி மூடி வைத்து விடவும். பிறகு 24 மணி நேரம் கழித்து நன்றாக அரிசி ஊறிய தண்ணீரை ஒரு பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். காலை மற்றும் இரவு என இரு வேளையுமே காட்டனில் அந்த அரிசி தண்ணீரை நனைத்து முகத்தை துடைக்கவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாகும்.

பெர்மெண்டட் ரைஸ் வாட்டர் முடி வளர்ச்சிக்கு:

ந்த தண்ணீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் புரதமும் கெராட்டினும் முடிகளுக்கு கிடைக்கிறது. அதனால் முடிகள்  வளர்ச்சியடைவது மட்டுமில்லாமல் பளபளப்பாகவும் இருக்கும். இது தலைமுடியின் பி.ஹெச் லெவலை சமன் செய்ய பயன்படுகிறது. இதனால் முடி உதிர்வதும், உடைவதும் குறையும்.

பெர்மெண்டட் அரிசி தண்ணீரை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பிக்மெண்டேஷன், கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் அனைத்தும் நீங்கி முகம் பொழிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

அரிசி மாவு எக்ஸ்பாலியேட்டர்:

·அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்.

·கடலை மாவு- 1 டேபிள் ஸ்பூன்.

·தேன்- தேவையான அளவு.

·ரோஸ் வாட்டர்- தேவையான அளவு.

முதலில் அரிசி மாவையும், கடலை மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டு அதில் தேனை தேவையான அளவு சேர்த்து கொள்ளவும். அதனோடு சிறிது ரோஸ் வாட்டரையும் சேர்த்து கொண்டு ஒரு கலவையாக செய்து கொள்ளவும்.

இப்போது செய்து வைத்த கலவையை முகத்தில் தடவி மிருதுவாக தேய்க்கவும். இந்த கலவையை 30 நிமிடம் முகத்தில் வைத்து விட்டு பிறகு கழுவி விடவும்.

அரிசிமாவின் கொரகொரப்பு தன்மை ஒரு எக்ஸ்பாலியேட்டர் போல பயன்படும்.முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் டேனை நீக்கும். இதை வாரத்துக்கு இருமுறை செய்வது நல்லது.

நீராகாரம்:

ரவு மீந்த சாதத்தில் தண்ணீரை ஊற்றி அடுத்த நாள் காலையில் எழுந்ததும் அந்த சாதம் ஊரிய தண்ணீரை குடிப்பதால் உடலில் உடனடியாக எனர்ஜி கிடைக்கும். இதில் அதிகமாக எலக்ட்ரோலைட்ஸ் உள்ளதால் உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யவும் உதவுகிறது.

பெர்மண்டட் ரைஸ் வாட்டர் காலங்காலமாக கொரிய மக்களாலும், ஜெப்பானியர்களாலும் முக அழகிற்கும், முடி வளர்ச்சிக்கும் மிகவும் பயன்பட்டது. அந்த செய்முறையை அப்படியே இப்போது இருக்கும் தொழில்நுட்பத்துடன் இணைத்து சீரம், கிளின்ஸர், கிரீம் என்று சந்தையில் பல வந்து விட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த ஊர வைத்த அரிசி தண்ணீரின் மகத்துவம் பலருக்கும் இப்போது புரிய வருவதால் பலரும் இதை வாங்கி பயன்படுத்த அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள்.

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

SCROLL FOR NEXT