கோடைக்காலம் வந்துவிட்டதால் கொடையும், கூலிங் கிளாஸும், தொப்பியும் இல்லாமல் வெளியே போகவே முடியாது போன்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த வெயிலில் இவையில்லாமல் வெளியில் சென்றால் கண்பிர்ச்சனை, சருமப் பிரச்சனையோடுதான் வீட்டுக்குத் திரும்ப முடியும். கூலிங் கிளாஸ் அவசியமாகும்போது எந்த முக வடிவத்திற்கு எந்த வகையான கூலிங் கிளாஸ் வாங்குவது என்ற சந்தேகம் நிச்சயம் வரும். அந்த சந்தேகத்தைப் போக்கும் விதமாகத்தான் இந்தத் தொகுப்பு.
பொதுவாக முக வடிவங்கள் என்றால் வட்டம், சதுரம், நீள்வட்டம், இதய வடிவம், வைர வடிவம் , செவ்வகம் போன்ற வடிவங்கள்தான் அதிகம் இருக்கும். அந்தவகையில் இந்த வடிவங்களுக்கு ஏற்ற கூலிங் கிளாஸ்களை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றுப் பார்ப்போம்.
வட்ட முகம்:
வட்ட முக வடிவம் கொண்டவர்களுக்கு மென்மையான வளைவுகள் காணப்படும். ஆகையால் அதற்கேற்றவாரு செவ்வக அல்லது சதுர வடிவங்கள் கொண்ட ஃப்ரேம்களை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் முகத்தை நீட்டமாகவும் சமநிலையாகவும் எடுத்துக் காண்பிக்கும். வட்ட ஃப்ரேம்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்களின் வட்ட முகத்தை இன்னும் எடுத்துக் காண்பிக்கும்.
சதுர முகம்:
சதுர முகம் கொண்டவர்கள் தங்களது முகத்தை மென்மையான வளைவுகளுடன் காண்பிக்க வட்டமான அல்லது ஓவல் வடிவ ஃப்ரேம்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் rimless அல்லது semi rimless கூலிங் கிளாஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
நீள்வட்ட முகம்:
நீள்வட்ட முகம் கொண்டவர்களுக்கு எந்தப் பிரச்சனையுமே இல்லை. அனைத்து வடிவம் கொண்ட கிளாஸ்களும் உங்கள் முகத்திற்கு செட் ஆகும். ஆனால் கிளாஸ் முகத்திற்கு மிகவும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ மட்டும் இருந்துவிடக் கூடாது.
இதய வடிவம்:
இதய வடிவ முகம் கொண்டவர்களின் நெற்றிப் பகுதி அகண்டு காணப்படும். ஆகையால் அதனை சமநிலைப்படுத்த அகலமான அடிப்பகுதியைக் கொண்டக் கண்ணாடியை வாங்கவும். Gate Eye Glasses மற்றும் Aviator Glasses போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல் கூர்மையான விளிம்பில்லாத ஃப்ரேம்களைப் பயன்படுத்தலாம்.
வைர முகம்:
வைர வடிவில் முகம் கொண்டவர்களின் கண்ணங்களில் இருக்கும் எலும்பு மற்றும் நெற்றி எலும்பு ஆகியவை எடுப்பாக இருக்கும். ஆகையால் அவர்கள் அதனைச் சமநிலையில் கொண்டு வரும் ஃப்ரேம்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஓவல் அல்லது Rimless ஃப்ரேம்களைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் எலும்புகளை மிகைப்படுத்தக்கூடிய குறுகிய ஃப்ரேம்களைத் தவிர்க்கவும்.
செவ்வக முகம்:
செவ்வக முகம் கொண்டவர்களுக்கு முகம் நீளமாக இருக்கும். ஆகையால் அவர்கள் முகம் அகலமாகத் தெரியும் ஃப்ரேம்களைப் பயன்படுத்தலாம். வட்டம் அல்லது ஓவல் வடிவம் கொண்ட ஃப்ரேம்கள் உங்கள் முகத்திற்குச் சிறப்பாக இருக்கும். அதேபோல் டார்க்கான நிறங்களைக் கொண்ட ஃப்ரேம்களைத் தவிர்க்கவும்.
முக வடிவங்கள் அடிப்படையில் கண்ணாடித் தேர்ந்தெடுப்பதுபோல உங்கள் வசதிக்கேற்ப கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.