பெண்களின் பெரிய கவலையில் ஒன்று முகத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளிகளை நீக்குவது பற்றித்தான். என்னதான் க்ரீம்கள், ஃபேஸ் வாஷ்கள் உபயோகித்தாலும் இயற்கையாக வீட்டில் செய்யப்படும் ரெமேடுகளுக்கு ஈடாகாது.
பிளாக்ஹெட்ஸ் என்பது மயிர்க்கால்கள் சருமத்தில் அடைப்பதால் தோலில் தோன்றும் சிறிய புடைப்புகள். இது கரும்புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. சருமத்தில் மேற்பரப்பு கருமையாகவோ அல்லது கருப்பு நிறமாகவோ தெரியும். இது முகத்தில் மட்டும் அல்ல மார்பு, கழுத்து பகுதியிலும் வருகிறது. சில காரணிகள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.
கரும்புள்ளிகள் ஏன் வருகிறது:
நமது சருமம் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாடு நிறமி கோளாறுகளை தூண்டும் அல்லது அதிகப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதனாலே கரும்புள்ளிகள் தென்படுகிறது.
இந்த கரும்புள்ளிகளை போக்குவதுவதற்கு வீட்டிலேயே உள்ள பொருட்களை வைத்து ஸ்க்ரப் தயாரித்துக் கொள்ளலாம். நீங்கள் க்ரீன் டீ குடிப்பவராக இருந்தால் யூஸ் செய்த டீத்தூள் பொடியை கீழே போடாதீர்கள். அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.
தேவையான பொருட்கள்:
க்ரீன் டீத்தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
க்ரீன் டீத்தூள் பொடியை தண்ணீரில் கலந்து மென்மையாக பேஸ்ட் ஆக்கி கலக்கவும். இதை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
நன்மைகள்:
உடலுக்கு ஆரோக்கியம் தருவது போன்று சருமத்துக்கும் நன்மை செய்யும். க்ரீன் டீத்தூள் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்தவை. க்ரீன் டீ அதிகப் படியான எண்ணெயை தடுக்கிறது. அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. சரும வீக்கத்தை குறைத்து கரும்புள்ளிகளை நீக்குகிறது. இதனால் இதை தினமும் பயன்படுத்தி வர உங்கள் முகமும் பொலிவு பெற்று பளபளப்பாக மாறும்.