yellow stains on the teeth
yellow stains on the teeth 
அழகு / ஃபேஷன்

பற்களின் மஞ்சள் கறை நீங்க வீட்டு வைத்தியம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

பற்களில் மஞ்சள் கறை படிவதை சரியாகக் கவனித்து சரி செய்யவில்லை என்றால் அவை பற்களின் வேர்களுக்குள் ஊடுருவி உள்ளே இருந்து பல் சொத்தையாக தொடங்கும். இதனால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தக் கசிவு, பல் வலி ஆகியவை உண்டாகும்.

1)  நாம் எது சாப்பிட்டாலும் உடனடியாக வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லை என்றால் சில துகள்கள் நம் பற்களிலும், ஈறுகளிலும் ஒட்டிக்கொள்ளும். காலையில் மட்டும் பல் தேய்க்காமல் இரவு படுக்கச் செல்லும் போதும் பற்களை துலக்க கறை படியாதது மட்டுமின்றி பல்வலி, சொத்தை ஆகியவையும் ஏற்படாமல் தடுக்கும்.

2)  சிறிது எலுமிச்சம் பழச்சாறுடன் இரண்டு சிமிட்டு உப்பு சேர்த்து கறைகள் உள்ள பற்களில் தேய்க்க சுத்தம் ஆகிவிடும்.

3)  ப்பிள் சிடர் வினிகரை ஒரு கப் நீரில் இரண்டு ஸ்பூன் என்ற அளவில் சேர்த்து வாய் கொப்பளிக்கவும். ஆப்பிள் சிடரை நீர் கலக்காமல் உபயோகிக்க கூடாது. இவை பற்களின் எனாமலை பாதிக்கும்.

4)  ல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் வாயில் விட்டுக்கொண்டு பத்து நிமிடங்கள் நன்றாக கொப்பளிக்கவும். பிறகு பற்பசை கொண்டு தேய்க்க நல்ல பலன் கிடைக்கும்.

5)  வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு 1 ஸ்பூன் சேர்த்து வாய் கொப்பளிக்கலாம்.

Gargling

6) வாரத்திற்கு ஒருமுறை சிறிது பேக்கிங் சோடாவை வைத்து கறை உள்ள பற்களை கவனமாக சுத்தம் செய்யவும்.

7) ரவு படுக்கப் போகும்போது மவுத்வாஷ் பயன்படுத்த  பற்களில் மஞ்சள் கறை படிவதை தவிர்க்கலாம். அத்துடன் வாயும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

8) லுமிச்சம் பழச்சாறு, உப்பு, ஆப்பிள் சிடர் ஆகியவை பற்களின் கறையை போக்க உதவும். அதே சமயம் அவற்றை அளவுக்கு மீறி பயன்படுத்தினால் பற்களில் கூச்சம் ஏற்படும். எனவே அளவாக பயன்படுத்தவும்.

9) நிறைய காபி டீ அருந்தும் பழக்கத்தை தவிர்த்து விடுவது நல்லது. புகைபிடிப்பதால் பற்களில் கறை ஏற்படும். எனவே புகை பிடிப்பதை நிறுத்துவது நம் பற்களுக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.

10) தேபோல் செயற்கை பானங்கள் நிறைய அருந்துவதை நிறுத்துவதும் பற்களில் கறை உண்டாவதை தடுக்கும்.

11) லுமிச்சை, ஆரஞ்சு, வாழைப்பழத் தோல் இவைகளை நாம் பற்களின் கறை நீங்க பயன்படுத்தலாம். சிறு துண்டு எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது வாழைப்பழத் தோலை எடுத்து கறை படிந்த இடத்தில் வைத்து தேய்த்து வந்தாலே மஞ்சள் கறை போய் பற்கள் பளிச்சிடும்.

அப்படியும் பற்களில் கறை போகவில்லை என்றால் தகுந்த பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொள்ளலாம்.

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

SCROLL FOR NEXT