Mudi Valara Tips.
Mudi Valara Tips. 
அழகு / ஃபேஷன்

எந்த Hair Product-களும் இல்லாமல் முடி வளர, இந்த 6 Tips-களைப் பின்பற்றுங்கள்!

பாரதி

முடி உதிர்வதெல்லாம் அனைவருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையே ஆகும். அதுவும் குளிர்க்காலங்களில் என்றால் சொல்லவே தேவையில்லை. முடியை அதிகமாக வளர்க்க வேண்டுமென்றால் முதலில் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். அதேபோல் முடி உடைவதையும் தடுக்க வேண்டும். அந்தவகையில் முடி வளர சில எளிய 6 டிப்ஸ்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. மசாஜ்:

உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதேபோல் முடியிழைகள் தூண்டப்பட்டு வலிமையாக மாற உதவுகிறது. இதற்கு நீங்கள் எண்ணெய்யை சுட வைத்து உச்சந்தலையில் நன்றாகத் தடவி ஒரு 20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்னர் 30 நிமிடங்கள் வரை நன்றாக ஊறவைத்துவிட்டு தலைக்கு குளிக்கலாம். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்லப் பலனைத் தரும்.

2. தலைமுடியை இறுக்கமாக கட்டாதீர்கள்:

இறுக்கமாகப் பிண்ணிப் போடுவதையும் போனிட்டெயில் போடுவதையும் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் இது முடிகளை இழுத்து இறுக்கி வலுவில்லாமல் ஆக்கிவிடும். இதனால் முடி சேதமடைவதோடு தலை வலியையும் உண்டாக்கும். அதேபோல் இரவில் முடியை விரித்தும் போட வேண்டாம். சற்று தளர பிண்ணிவிட்டு உறங்குங்கள். ஈரமுடியை சீப்பு பயன்படுத்தி சீவ வேண்டாம். உலரந்த முடியை சிக்கெடுக்கும் போது பெரிய பல் வைத்த சீப்பை பயன்படுத்துங்கள்.

3. பிளவுப்பட்ட முடிகளை வெட்டி விடுங்கள்:

நுனி முடி சேதமடைந்தால் முடி வளர்வதைத் தடுத்துவிடும். ஆகையால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நுனி முடிகளை வெட்டிவிடுங்கள். பின் முடி சீராக வளரும்.

4. ஷாம்புவிற்கு பதில் கண்டிஷனர்:

தலையில் நிறைய ஷாம்பு பயன்படுத்தினால் எண்ணெய் சத்து இல்லாமல் தலை முடி வலுவிழப்பதோடு பொடுகு வரவும் காரணமாகிவிடும். ஆகையால் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தீர்கள் என்றால் ஒரு முறை கண்டிஷ்னரைப் பயன்படுத்துங்கள். அதேபோல் ஷாம்பு பயன்படுத்தும்போது முதலில் ஷாம்புவை தண்ணீரில் நனைத்தப் பிறகு தலையில் தடவுங்கள்.

5. வாரம் ஒருமுறை முட்டை மாஸ்க்:

 முடிக்கு கெரட்டின் என்ற புரத பொருள்தான் வலிமைத் தருகிறது. முட்டையிலும் புரதச் சத்து அதிகம் உள்ளதால் வாரம் ஒரு முறை முட்டை மாஸ்க் பயன்படுத்துங்கள். இது உங்கள் தலைமுடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும். முட்டையின் மஞ்சள் கருவை க்ரீமாகும் வரை கலக்க வேண்டும். அதனுடன் தயிர் சேர்த்து தலை மற்றும் கூந்தலில் தடவி காய வைத்து தலைக் குளிக்க வேண்டும்.

6. உணவு வகைகள்:

ஒமேகா 3 கொழுப்பு வகைகள் கொண்ட முட்டை, மீன், கோழி இறைச்சி, கடல் உணவுகள், நட்ஸ் போன்ர உணவுகள் முடி உதிர்வதைத் தடுக்கும். அதேபோல் வைட்டமின் சி,ஏ,ஈ மற்றும் செலினியம், பையோட்டின் கொண்ட உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT