What would it be like if animals ruled the world? 
பசுமை / சுற்றுச்சூழல்

விலங்குகள் இவ்வுலகை ஆட்சி செய்தால் எப்படி இருக்கும்?

கிரி கணபதி

நாம் வாழும் இந்த உலகம் மனிதர்களால் ஆளப்படுகிறது. ஆனால், ஒருவேளை இது மிருகங்களால் ஆட்சி செய்யப்பட்டால் எப்படி இருக்கும் தெரியுமா? இந்த கற்பனையான கேள்விக்கு பலர் பலவிதமான பதில்களைக் கூறுவார்கள். எனவே இப்பதிவில் இந்த உலகை மிருகங்கள் ஆட்சி செய்தால் எப்படி இருக்கும் என்பதற்கான சில கற்பனையான விளைவுகளைப் பார்க்கலாம். 

மிருகங்களின் ஆட்சியில் இந்த உலகம் என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். மிருகங்கள் பொதுவாகவே ஒற்றுமையுடன் வாழும் இயல்புடையவை. மனிதர்களைப் போல போர், சண்டை, வன்முறை போன்றவை அவற்றுக்கு இல்லை. எனவே மிருகங்கள் ஆட்சி செய்தால் இந்த உலகம் முதலில் அமைதியாக இருக்கும். மிருகங்களின் அதிகபட்ச தேவையாக இருப்பது உணவு மற்றும் உறவு மட்டுமே என்பதால், வேறு எந்த தேவையில்லாத விஷயங்களுக்கும் பிரச்சனைகள் ஏற்படாது. 

மனிதர்கள் இயற்கையை அழித்து தான் செழித்து வாழ்வதற்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் மிருகங்கள் இயற்கையுடன் இணைந்து வாழும் இயல்புடையவை எனவே மிருகங்கள் ஆட்சி செய்தால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதுகாக்கப்படும். மேலும், மிருகங்கள் ஓரளவுக்கு நியாய தர்மத்தை கடைப்பிடிப்பதால் அவை இவ்வுலகை ஆட்சி செய்தால் எல்லா உயிரினங்களுக்கும் நியாயமான முறையில் அனைத்தும் கிடைக்க வழி செய்யும். 

மனிதர்களின் ஆட்சியில் அவர்கள் மிருகங்களை அடிமைப்படுத்தி சுரண்டுகின்றனர். ஆனால் மிருகங்களின் ஆட்சியில் எல்லா உயிரினங்களுக்கும் சுதந்திரம் இருக்கும். ஒருவேளை மிருகங்கள் மனிதர்களைப் போல சிந்திக்கத் தொடங்கினால் மட்டுமே அது உலகில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அவை வெறும் மிருகங்களாகவே இவ்வுலகை ஆட்சி செய்வதால், எவ்வித பெரிய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பில்லை. 

மனிதர்களில் சிலர் வன்முறை மற்றும் வெறுப்பைப் பரப்புகின்றனர் ஆனால் மிருகங்கள் அன்பு மற்றும் பாசத்துடன் வாழும் இயல்புடையவை. எனவே மிருகங்களின் ஆட்சியில் இவ்வுலகம் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும். 

மிருகங்கள் இவ்வுலகை ஆட்சி செய்தால் உண்மையிலேயே இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில், அவை அனைத்தும் ஐந்தறிவு ஜீவராசிகள். நம்மைப் போல அவற்றால் சிந்திக்க முடியாது. இருப்பினும் அவை ஆட்சி செய்தால், இந்த உலகம் முற்றிலும் வித்தியாசமாக சிறந்த உலகமாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஏனெனில், மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் சுய லாபத்திற்காக இவ்வுலகை அழித்து வருகின்றனர். எனவே மிருகங்கள் ஆட்சி செய்தால், சுற்றுச்சூழல் பெருமளவில் பாதுகாக்கப்படும் என்பதால், மிருக ஆட்சியே நன்றாக இருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.   

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT