mushroom gravy
mushroom gravy  Image credit - youtube.com
உணவு / சமையல்

ஐந்தே நிமிடத்தில் செய்து அசத்தலாம் அட்டகாசமான மஷ்ரூம் கிரேவி!

எஸ்.விஜயலட்சுமி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் சைடிஷ் இது. மிக எளிதாக ஐந்தே நிமிடங்களில் தயார் செய்யக்கூடியது ஆகும். 

தேவையான பொருட்கள்;

1. ரெடிமேட் மஷ்ரூம் - கால் கிலோ

2. பெரிய வெங்காயம் -இரண்டு

3. தக்காளி - சிறிய சைஸ்  இரண்டு

4. கருவேப்பிலை சிறிதளவு

5. இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்

6.  கரம் மசாலா - அரை ஸ்பூன்

7. மல்லித்தூள் - அரை ஸ்பூன்

8. மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்

9. மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்

10. உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை;

தண்ணீரில் காளானை நன்றாக கழுவி விட்டு சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும். 

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும். வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கவும். பின்பு தக்காளியை போட்டு ஒரு நிமிடம்   வதக்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்,ட் மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு நிமிடம் வேக வைக்கவும். நறுக்கி வைத்துள்ள மஷ்ரூம் சேர்த்து, லேசாக நீரூற்றி  (கால் டம்ளர் போதும்) மூன்று நிமிடம் வேகவிடவும். மசாலா மஷ்ரூமில் படுமாறு நன்றாக கிளறி விடவும். இப்போது அடுப்பை அணைத்து  வாணலியை கீழே இறக்கி வைக்கவும்.

அருமையான வாசம் மிக்க மஷ்ரூம் கிரேவி ரெடி.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

SCROLL FOR NEXT