பழம் பொரி...
பழம் பொரி... 
உணவு / சமையல்

கேரளா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ‘பழம் பொரி’ செய்வது எப்படி?

நான்சி மலர்

ழம் பொரி கேரளாவில் மிகவும் பிரபலமான சாலை உணவாகும். இது அங்கே சிறந்த டீ டைம் ஸ்நாக்ஸ். இதை ‘எத்தக்காய் அப்பம்’ என்றும் அழைப்பார்கள். இனிப்பு சுவையுடன் பஜ்ஜி போன்று இருப்பது அனைவராலும் விரும்பப்படுகிறது. அத்தகைய பழம் பொரியை வீட்டிலேயே எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம்-2

மைதா -1/2 கப்.

அரிசி மாவு-2 தேக்கரண்டி.

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி.

சக்கரை- 2 தேக்கரண்டி.

ஏலக்காய்-1/4 தேக்கரண்டி.

எண்ணெய்- தேவையான அளவு.

உப்பு- தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

முதலில் நேந்திரம் வாழைப்பழத்தை எடுத்து, நீளமாக பஜ்ஜி போடுவதற்கு வெட்டுவது போல வெட்டி வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பவுலில் ½ கப் மைதா, 2 தேக்கரண்டி அரிசி மாவு, 2 தேக்கரண்டி சக்கரை, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, ¼ தேக்கரண்டி ஏலக்காய் தூள், உப்பு தேவையான அளவு. இப்போது எல்லாவற்றையும் நன்றாக கலக்கி விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது வெட்டி வைத்திருக்கும் நேந்திரப்பழத்தை கரைத்து வைத்திருக்கும் மாவில் முக்கி மாவு நன்றாக எல்லா இடத்திலும் படும்படி பிரட்டி விட்டு, எடுத்து அடுப்பில் எண்ணெயை காய வைத்து அதில் போடவும். பழம் பொரி நன்றாக இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் போது எடுத்து விடவும். இப்போது இதன் மீது கொஞ்சம் தேங்காய் தூவி டீயுடன் பரிமாறவும் செம டேஸ்டாக இருக்கும்.

முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் கதிரவனைக்காண கண் கோடி வேண்டும்!

உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க உங்களின் தனித்தன்மையை வளருங்கள்..!

சிறுவர்களுக்கான படத்துடன் சிவகார்த்திகேயனை அணுகியது ஏன்? – ‘குரங்கு பெடல்’ கமலக்கண்ணன் விளக்கம்!

3 சுவையான பாயாசம் வகைகள்!

Body Heat: கோடைகாலத்தில் உடல் உஷ்ணமடைவது ஏன் தெரியுமா?.. தீர்வுகளையும் தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT