உணவு / சமையல்

மெக்கரோனி கீர்!

கல்கி டெஸ்க்

தேவையான பொருட்கள்:

மெக்கரோனி - 150 கிராம், பால்  - ½  லிட்டர், சர்க்கரை – 1½  கப், நெய் - 4 டேபிள் ஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - 1 ஸ்பூன்,  கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், பனீர் துருவியது - 2 டேபிள் ஸ்பூன்,  கொப்பரைத் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 6, திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

மெக்கரோனியை வேகவைத்து நீர் வடித்து எடுத்துச் சிறிது நெய் சேர்த்து வைத்துக்கொள்ளவும். கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டுக் கடலை மாவை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு பாலை விட்டு நன்கு காய்ந்ததும் வறுத்த மாவையும் மெக்கரோனியையும் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பைக் குறைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு சர்க்கரை, கொப்பரைத் துருவல், பனீர் துருவியது, ஏலப்பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். இறக்கி வைத்து நெய்யில் முந்திரியைத் துண்டுகளாக்கி வறுத்துச் சேர்க்கவும். திராட்சையையும் நெய்யில் வறுத்துச் சேர்த்து சூடாகப் பரிமாறவும். விரும்பினால் பாதாம் எசென்ஸ் ¼ ஸ்பூன் சேர்த்துக்கொள்ளவும்.

வாசனைகளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிலந்திகளும் கரையான்களும் வாழும் இடமானது இது!

கேரளாவின் சுவை மிகுந்த இரண்டு தீயல் வகைகள்!

வீட்டுக்கு அழகு சேர்க்கும் போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு!

பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT