Unniyappam
Unniyappam and stuffed milagai bajji recipes Image Credits: Nirapara
உணவு / சமையல்

டேஸ்டியான உன்னியப்பம்-ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?

நான்சி மலர்

ழைக்காலங்கள்ல சுடச்சுட செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்களான கேரளா ஸ்பெஷல் உன்னியப்பம் மற்றும் ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

உன்னியப்பம் செய்ய தேவையான பொருட்கள்;

அரிசி-1கப்.

வெல்லம்-250 கிராம்.

வாழைப்பழம்-2

நெய்-1 ½ தேக்கரண்டி.

எள்-1/2 தேக்கரண்டி.

தேங்காய் துண்டுகள்-3 தேக்கரண்டி.

ஏலக்காய் தூள்-4

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்- தேவையான அளவு.

உன்னியப்பம் செய்முறை விளக்கம்;

முதலில் அரிசி 1கப்பை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அதில் வாழைப்பழம் இரண்டு சேர்த்து வெல்லம் 1கப்பை நன்றாக தண்ணீர் ஊற்றி கரையும் வரை காய்ச்சி வடிகட்டி அதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும். இத்துடன் ஏலக்காய் 4, பேக்கிங் சோடா ¼ தேக்கரண்டி சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இதில் நெய்யில் வறுத்து வைத்த தேங்காய் துண்டுகள் 3 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு, எள் ½ தேக்கரண்டி சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் பணியாரம் செய்யும் பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் தடவி விட்டு கலந்து வைத்திருக்கும் மாவை குழியில் ஊற்றவும். இப்போது ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் இன்னொரு பக்கம் திருப்பி போட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கேரளா ஸ்பெஷல் உன்னியப்பம் தயார். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே டிரை பண்ணி பாருங்கள்.

ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்;

உருளை-1

வெங்காயம்-1

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

ஜீரகத்தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

கருவேப்பிலை, கொத்தமல்லி-சிறிதளவு.

பஜ்ஜி மிளகாய்-3

கடலை மாவு-4 தேக்கரண்டி.

அரிசி மாவு- 2 தேக்கரண்டி.

சோளமாவு-1 தேக்கரண்டி.

மைதா-1 தேக்கரண்டி.

பேக்கிங் சோடா-1/4 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

உப்பு- தேவையான அளவு.

எண்ணெய்-தேவையான அளவு.

ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி செய்முறை விளக்கம்;

முதலில் ஒரு உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, சீரகத்தூள் 1தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிது, உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் 4 தேக்கரண்டி கடலை மாவு, 2 தேக்கரண்டி அரிசி மாவு, சோளமாவு 1 தேக்கரண்டி, மைதா 1 தேக்கரண்டி, 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

இப்போது பஜ்ஜி மிளகாயை எடுத்துக் கொண்டு நடுவிலே வெட்டிக் கொண்டு உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு நாம் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு ஸ்டப்பை உள்ளே வைத்து அதை நன்றாக பஜ்ஜி மாவில் முக்கி கொதிக்க வைத்திருக்கும் எண்ணெய்யில் போட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வைத்து  எடுக்கவும். இப்போது சூப்பரான ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி தயார். நீங்களும் கண்டிப்பாக வீட்டில் ஒருமுறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.

கேன்சர் நோய்க்கு மிகச் சிறந்த தடுப்பு மருந்தாகும் கேக் பழம்!

இடையில் அரைஞாண் கயிறு கட்டும் ரகசியம் தெரியுமா?

மதுரையின் எல்லையில் அமர்ந்த மடப்புரத்து காளியின் கதை தெரியுமா?

நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்கிறீர்களா? போச்சு! 

காலைப் பொழுதை சந்தோஷமாக மாற்றும் சத்தான 5 வகை உணவுகள்!

SCROLL FOR NEXT