இனிய குடும்பம் 
வீடு / குடும்பம்

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

பொ.பாலாஜிகணேஷ்

வ்வொரு குடும்பத்தின் மகிழ்ச்சியும் அக்குடும்பப் பெண்களின் கையில்தான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால், எல்லாவற்றையும் நிர்வகிப்பது அவர்கள்தானே. குடும்ப வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

குடும்ப வாழ்க்கை இனிமையானதாக அமைய முதல் காரணம் பெண்கள்தான். குடும்பத் தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்களின் கையில்தான் இது இருக்கிறது. குடும்பப் பெண்கள் எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க மறக்காதீர்கள். குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்கப் பழகுங்கள். மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தாற்போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாகப் பேசுகள். நல்ல விஷயங்களை மனம் திறந்து பாராட்டுங்கள். சின்னச் சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதற்கு கை, கால் வைத்து அழகுப்படுத்த வேண்டாம். எந்த வகை பிரச்னை வந்தாலும் சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி பாருங்கள். கேட்கவில்லை என்றால் துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள். குடும்பத்தின் பிரச்னைக்கு தீர்வு என்னவென்று தேடுகள். எதற்கும் பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள். தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்.

‘இறைவன் கொடுத்த அழகான இறைய நாளை நான் பயனுள்ளதாகத்தான் செலவு செய்வேன்’ என்ற மன உறுதியுடன் தேவையான நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே அந்நாளைக் செலவு செய்யுங்கள். நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதனை மனதில் கொண்டு சிரித்த முகத்துடன் பேசிப் பழகுங்கள்.

நீங்கள் நினைப்பதை உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் பிடிக்காதீங்க. மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்துப் பேசப் பழகுங்கள்.

குழந்தைகளுடன் சந்தோஷமாகப் பேசி, விளையாடுங்கள். சிறு குழந்தைகளின் சேட்டைகளை ரசிக்கப் பழகுங்கள். சேட்டை அதிகமானால் கண்டிக்கத் தவற வேண்டாம். உடல் ஆரோக்கியம் இல்லாதபொழுதுதான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும். முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்கப் பழகுங்கள்.

சில சமயம் வரும் சின்னச் சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல், வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள். எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒருசில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடுங்கள். உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள் மனதுக்கும் ஒய்வு கொடுங்கள்.

குடும்பத்தில் பிரச்னைகள் வரும்பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்க வேண்டாம். முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்துப் பேசிப் பழகுங்கள். குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம். அதனை பக்குவமாக செய்வது குடும்பத் தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில்தான் இருக்கிறது. மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் மனது தூய்மையாகும்.

அவசர காலத்தில் விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? 

உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுக்கும் 8 விஷயங்கள் எவை தெரியுமா?

கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அடிக்கடி ஜெல்லி மிட்டாய் சாப்பிடுபவரா நீங்க? போச்சு போங்க..! அப்போ உங்களுக்கும் இந்த விஷயம் தெரியாதா?

கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

SCROLL FOR NEXT