banana skin benefits
banana skin benefits 
வீடு / குடும்பம்

தூக்கி எறியும் வாழைத் தோலில் இத்தனை பயன்களா?

செளமியா சுப்ரமணியன்

வாழைப்பழத்தில் உடலுக்குத் தேவையான நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். பழத்தை சாப்பிட்டுவிட்டு வாழை தோலை அலட்சியமாக நாம் குப்பைத் தொட்டியில் வீசி எறிவோம். அப்படி குப்பையில் வீசி எறியும் வாழை தோலிலும் பல்வேறு பயன்கள் அடங்கி உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

* வாழைப்பழத் தோலின் உட்பகுதியை பற்களில் வைத்து சில நிமிடங்கள், சில நாட்கள் தொடர்ந்து தேய்த்துவந்தால், அந்த வாழைத்தோலில் உள்ள கனிமங்களால் பற்கள் வெண்மையாக மாறும்.

* வாழைப்பழ தோலை மிக்ஸியில் போட்டு நன்கு பேஸ்ட் போன்று அரைத்து, வெள்ளி பொருட்கள் மீது தடவி, சில நிமிடங்கள் கழித்து, கழுவினால் வெள்ளி பொருட்கள் பளபளக்கும்.

* வாழைப்பழ தோலின் உட்பகுதியை, தோல் பொருட்களால் ஆன ஷூவை துடைத்த பின்னர் துணியை வைத்து துடைத்தால், புதியது போல பளபளவென பிரகாசிக்கும்.

* வறண்ட சருமத்தில் வாழைப்பழ தோலில் உட்பகுதியை தேய்த்து மாய்ஸ்சரைசராக பயன்படுத்தி வர, சருமம் மிருதுவாவதுடன், ஈரப்பதத்துடனும் இருக்க உதவும்.

* வாழைப்பழத் தோலின் உட்புறத்தை முகப்பரு உள்ள பகுதியில் தேய்க்கலாம். வாழைப்பழத் தோலில் உள்ள நோயெதிர்ப்பு ஆற்றல், அழற்சி எதிர்ப்பு தன்மை, முகப்பருவால் சிவந்து போவதையும், அழற்சியையும் குறைக்க உதவுகிறது.

* இரவு உறங்கச் செல்லும் முன் சிறிதளவு வாழைப்பழ தோலை மரு உள்ள பகுதியில் தேய்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும். வாழைப்பழத் தோலில் உள்ள என்சைம்கள் மருவை நீக்க உதவும்.

* வாழைப்பழத் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வீட்டுத் தோட்டத்தில் போடவும். இது அஸ்வினி பூச்சி வளர்ச்சியை தடுக்கவும், பொதுவான இயற்கையான பூச்சி விரட்டியாகவும் செயல்படும் ஆற்றல் கொண்டது.

* வாழைப்பழத் தோலில், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மண்ணுக்குள் போடுவதால், தாவரங்களுக்கு நல்ல இயற்கையான ஊட்டச்சத்து கிடைக்கும். பூச்செடிகளுக்குப் போட்டால், செடி நன்கு பூக்கும்.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT