Ayn Rand
Ayn Rand 
Motivation

பணம் பற்றி அறிஞர்கள் கூறிய 15 Quotes!

பாரதி

என்னத்தான் நாம் பணத்தை விட குணம், பழக்கவழக்கம் தான் முக்கியம் என்று கூறினாலும், இறுதியாக வெல்வது என்னவோ பணமாகத்தான் இருக்கும். இருந்தாலும் கூட, பல பேர் பணத்திற்கும் நேர்மைக்கும் இடையே போட்டி போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒருவன் தன் வாழ்வில் நிம்மதியாக வாழ, தேவையான அளவு பணம் வைத்திருப்பது அவசியம். மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று நினைப்பவன் அளவுக்கதிகமான பணத்தை சம்பாதிக்கலாம். ஆனால் அதே அளவுக்கதிகமான பணம் வைத்திருப்பவனுக்கு வெவ்வேறு விதத்தில் துன்பம் ஏற்படும்.

அந்தவகையில், பணம் பற்றி அறிஞர்கள் கூறும் மேற்கோள்கள் பற்றி பார்ப்போம்.

1.   சில சமயங்களில் பணமும் விலைமதிப்பில்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. – Ralph Waldo Emerson.

2.  அளவுக்கு அதிகமான பணம், அனைத்து தீய செயல்களின் வேராகும். – Mark Twain

3.  குறைவாக சம்பாதிப்பவன் ஏழை ஒன்றும் இல்லை, அதிகமாக செலவு செய்பவனே உண்மையான ஏழை. – Seneca

4.  பணம் ஒரு கருவி மட்டுமே, அது நீங்கள் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்லும். ஆனால் அது உங்களை ஓட்டுனராக மாற்றி ஆட்டி வைக்கக்கூடாது. – Ayn Rand

5.  பணம் இல்லாத காலி பை ஒருவனை கீழே தள்ளிவிடாது. ஆனால் மூளையிலும் மனதிலும் ஒன்றுமில்லாமல் திரிபவன் நிச்சயம் கீழே விழுவான். – Norman Vincet Peale

6.  ஒருவனின் திறமை சம்பாதிப்பதில் இல்லை, அதை எப்படி வைத்துக்கொள்கிறான் என்பதில்தான் உள்ளது. – பெயர் அறியப்படவில்லை.

7.  பணம் ஒரு பயங்கரமான எஜமான். அதேபோல் சிறந்த வேலைக்காரன். – P.T.Barnum

8.  ஒரு நல்ல எதிர்காலத்தை அடைவதற்கான ஒரு சிறந்த வழி, இன்று பணம் சம்பாதிப்பதுதான். – Peter Drucker

9.  பணம் சம்பாதிப்பது முக்கியம்தான். அதேபோல் பணத்தால் சம்பாதிக்க முடியாததை வைத்துக்கொள்வதும் அவசியம். பணம் போனாலும், அவற்றை இழந்துவிடாதீர்கள்.- George Lorimer

10. பணம் கைக்கு வருவதற்குள் உன்னிடம் இருக்கும் கடைசி பணத்தை செலவு செய்ய வேண்டாம். – Thomas Jefferson

11. பணத்தை விட நேரமே மிகவும் முக்கியமானது. உன்னால் பணத்தை சம்பாதிக்க முடியும். ஆனால் நேரத்தை சம்பாதிக்க முடியாது. – Jim Rohn

12. உன்னுடைய பணம் முழுவதையும் இழந்த பிறகு உனக்கு மதிப்பு இருக்கிறது என்றால், உண்மையில் நீதான் பணக்காரன். - பெயர் அறியப்படவில்லை.

13. இவ்வுலகில் பணம் ஒன்றும் அவ்வளவு முக்கியமல்ல. காதல் தான். அதிர்ஸ்டவசமாக நான் பணத்தை காதலித்துவிட்டேன். – Jackie Mason

14. நீ அதிகமாக படித்தால், அதிகமாக சம்பாதிப்பாய். - பெயர் அறியப்படவில்லை.

15. செல்வம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. செல்வம் இல்லாவிட்டால், உன்னை யாருக்கும் தெரியாது. - பெயர் அறியப்படவில்லை.

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

SCROLL FOR NEXT