5 Dark Psychology Tricks
5 Dark Psychology Tricks 
Motivation

இந்த 5 Dark Psychology தந்திரங்களில் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள்! 

கிரி கணபதி

Dark Psychology என்பது ஒருவரின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக மனித நடத்தை மற்றும் எண்ணங்களுடன் விளையாடி ஒருவரைக் கட்டுப்படுத்த நினைப்பதைக் குறிக்கிறது. எனவே இப்பதிவில் நான் சொல்லப்போகும் சில தந்திரங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலமாக, இவற்றை பயன்படுத்தி உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பவர்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும். 

1. குத்திக் காட்டுதல்: குத்திக் காட்டுதல் என்பது ஒருவரை மோசமாகக் கையாளும் விதமாகும். இதைப் பயன்படுத்தி ஒருவரது மனநிலையை முற்றிலுமாக சிதைக்க முடியும். இந்த தந்திரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒருவரது செயல்களால் ஏற்பட்ட விளைவுகளைக் குத்திக்காட்டி அந்த நபரை மனச் சங்கடத்திற்கு உள்ளாக்குவார்கள். எனவே இனி யாராவது நீங்கள் செய்யும் தவறுகளை அதிகமாக சொல்லிக்காட்டி உங்களை மனவேதனையடையச் செய்தால் அதை நம்பாதீர்கள். உங்களது உள்ளுணர்வை நம்பி அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். 

2. சிந்தனையை மாற்றுதல்: ஒரு நபர் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தைப்பற்றி தவறாகக்கூறி அவர்களை உளவியல் ரீதியாக அசௌகரியத்தை அனுபவிக்க செய்யும்போது அவர்களது சிந்தனைகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதாவது இதுவரை அவர்கள் நம்பிய அனைத்து விஷயங்களும் பொய்யாக இருக்குமோ என அவர்களே சிந்திக்க வைத்து விடுவார்கள் சிலர். இத்தகைய மனநிலையை நீங்கள் எதிர்த்துப் போராட, எல்லா சூழ்நிலைகளையும் நன்கு ஆராய்ந்து அவற்றின் உண்மைத்தன்மையைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். 

3. மனதை மாற்றும் வார்த்தைகள்: வார்த்தைகளுக்கு அதிக ஆற்றல் உள்ளது. பிறர் சொல்லும் ஏதோ ஒரு வார்த்தை நம் மனநிலையை முற்றிலுமாக மாற்றிக்விடக்கூடும். எனவே உங்களிடம் எப்போதும் தவறான வார்த்தைகளையே பயன்படுத்தி உங்களை மட்டம் தட்டுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அத்தகைவர்கள் உங்களது வாழ்க்கையை மிகவும் மோசமாக மாற்றி விடுவார்கள். எனவே அத்தகைய நபர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள்.

4. உணர்ச்சிகளை கையாளுபவர்கள்: சில நபர்கள் உங்களது உணர்ச்சிகளைப் பயன்படுத்தியும் உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பார்கள். உங்களது செயல்கள் மற்றும் முடிவுகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற, உங்களின் குற்ற உணர்வு, பயம் மற்றும் அனுதாபத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குதான் உங்களது உணர்ச்சிகளை கையாள்வதில் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டும். உணர்வுரீதியாக முடிவுகளை எடுக்காமல், நன்கு சிந்தித்து முடிவெடுத்தாலே இத்தகைய நபர்களிடமிருந்து சாக்கிரதையாக இருக்கலாம். 

5. தனிமைப்படுத்துதல்: தனிமைப்படுத்துதல் முறையைக் கையால்பவர்கள் திடீரென ஒரு நபரை வெறுத்து ஒதுக்கி அவர்களது சப்போர்ட் சிஸ்டத்தை முற்றிலுமாக பலவீனப்படுத்தி துன்பமடையச் செய்கின்றனர். இதன் மூலமாக, தான் வெறுத்து ஒதுக்கும் நபர் அவர்களுக்கு தேவையானதை செய்வார்கள் என்பது அவர்களின் எண்ணமாக இருக்கும். இத்தகைய தந்திரத்தை உங்களது நண்பர்கள், உறவினர்கள், காதலன், காதலி யார் வேண்டுமானாலும் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தி உங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். எனவே எப்போதும் நம்பகமான நபர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT