Decision Making. 
Motivation

விரைவாக முடிவெடுக்க உதவும் 6 தந்திரங்கள்!

பாரதி

பொதுவாக நிறைய பேர் தடுமாறும் ஒரே விஷயம் முடிவெடுப்பதில்தான். அந்த தடுமாற்றத்தால் முடிவெடுப்பதில் சொதப்பி மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். எதுவும் யோசிக்காமல் முடிவெடுத்து தவறு செய்வது ஒன்று என்றால், அனைத்து பக்கங்களிலும் யோசித்தும் கூட சிலர் முடிவுகளைத் தவறாக எடுக்கின்றனர். அதனால் ஏன் தவறாக முடிந்தது? என்று புரிந்துக்கொள்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட, எப்படி முடிவெடுக்க வேண்டும்? என்று தெரிந்துக்கொண்டாலே நல்ல முடிவுகளை மிக சுலபமாக எடுத்துவிடலாம்.

1. கருத்துகளை குறையுங்கள்:

ஒரு விஷயத்தில் திடமான முடிவை எடுக்க வேண்டுமென்றால் முதலில் அது சார்பான கருத்துகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எப்படி குறைக்க வேண்டுமென்றால், முதல் நிலை முக்கியமானவை, இரண்டாம் நிலை முக்கியமானவை, மூன்றாம் நிலை முக்கியமானவை என்று பிரிக்க வேண்டும். பின் நான்காம் நிலையில் தேவையில்லாத விஷயங்களையும் சம்பதமில்லாத விஷயங்களையும் தனியாக ஒதுக்கிவிட வேண்டும். இப்போது முக்கியமான முதல் இரண்டு விஷயங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. கருத்துகளைப் பிரிக்க வேண்டும்:

கருத்துகளைக் குறைப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் பிரிப்பதும் முக்கியம். பிரிப்பது மிகவும் சுலபமானதுதான். நல்லது மற்றும் கெட்டது என இரண்டாகப் பிரிக்க வேண்டும். மேல் சொன்ன அந்த முதல் இரண்டு நிலைகளிலிருந்தும் நல்லது, கெட்டது என மீண்டும் பிரித்தால் கருத்துகள் குறையும். முடிவெடுப்பதும் எளிதாகி விடும்.

3. தைரியம் சொல்வதை கேளுங்கள்:

முடிவெடுப்பதில் மிக மிக முக்கியமானது தைரியம்தான். ஏனெனில் தைரியம் இல்லாமல் நீங்கள் ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு பெரிய விஷயத்தை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தாலும் சரி, ஒரு சிறு விஷயத்தை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தாலும் சரி, தைரியத்துடன் அணுகுவது நல்லது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், தைரியத்தை வளர்க்க வேண்டுமென்றால் தைரியத்தின் மீது நம்பிக்கை வைத்து அதே வழியில் பயணித்தால்தான் முடியும்.

4. நேரத்தை பணம் போல் நினைத்துக்கொள்ளுங்கள்:

முடிவெடுப்பதற்கு குறிப்பிட்ட நேரம் வைத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் கருத்துகளுக்கு அப்பால் செல்லாமல் அந்த வட்டத்திற்குள்ளேயே இருந்து முடிவெடுக்க முடியும். மேலும் தேவையில்லாமல் பணம் செலவானால் எப்படி உணர்வீர்களோ அதேபோல் நேரத்திற்கும் உணருங்கள்.

5. ஒப்பீட்டு பாருங்கள்:

ஆதாவது இதற்கு முன் முடிவெடுத்த விஷயத்தையும் அதனுடைய விளைவையும், இப்போது முடிவெடுக்கப் போகும் விஷயத்தையும் ஒப்பீட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்.

6. நாட்களை வீணாக்காதீர்கள்:

அனைத்தையும் விட மிக முக்கியமானது இதுதான். முடிவெடுக்காமல் நாட்களை மட்டும் ஓட்டிக்கொண்டு இருக்க நினைத்து விடாதீர்கள். முடிவு எடுக்காமல் விட்டு விடலாம் என்றும் எண்ணிவிடாதீர்கள். ஏனெனில் முடிவுக்கு முடிவு ஒன்று மட்டுமே ஒரே தீர்வு. எனவே எடுக்கும் முடிவுகளை விரைவாக சிந்தித்து சரியாக எடுங்கள்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT