Body Language 
Motivation

Body Language: உடல் மொழியை மேம்படுத்துவதற்கான தந்திரங்கள்! 

கிரி கணபதி

நாம் பேசும் வார்த்தைகளை விட நம் உடல் மொழியானது நம்மைப் பற்றி நிறைய சொல்லும். நம் தன்னம்பிக்கை ஆர்வம் நேர்மை போன்ற பல விஷயங்களை மற்றவர்களுக்கு உணர்த்த உடல் மொழி முக்கிய பங்கு வகிக்கிறது. சரியான உடல் மொழியைக் கையாண்டால் அதன் மூலம் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு நம் இலக்குகளை அடைந்து வெற்றியாளர்களாக மாறலாம். இந்தப் பதிவில் உங்கள் உடல் மொழியை மேம்படுத்த சில எளிய வழிமுறைகளைப் பற்றி பார்ப்போம். 

உடல் மொழி என்றால் என்ன?

உடல் மொழி என்பது வாய் வழியாக தொடர்பு கொள்ளாமல் உடல் அசைவுகள் மூலமாக நாம் நம்மை வெளிப்படுத்தும் தகவல் தொடர்பு முறையாகும். இதில் முக பாவனைகள், கண் தொடர்பு, தோரணை, சைகைகள், கை மற்றும் கால் அசைவுகள் போன்றவை அடங்கும். 

உடல் மொழியை மேம்படுத்தும் வழிகள்: 

  • எங்கு சென்றாலும் நேராக நின்று தோள்களை அகலமாக விரித்து நிற்கவும். இது உங்களின் தன்னம்பிக்கையின் அடையாளமாகும். 

  • யாருடனாவது பேசும்போது கண்களை நேருக்கு நேர் பார்க்கவும். இது நீங்கள் கவனமாக அவர்கள் சொல்வதை கவனிக்கிறீர்கள் மற்றும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 

  • பேசும்போது சிறிய புன்னகை, சிரிப்பு போன்ற முகபாவனைகள் உங்களின் நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்த உதவும். 

  • உங்களது கைகளை சரியாக பயன்படுத்துங்கள். கைகளை சரியான முறையில் அசைப்பது நீங்கள் கூறும் கருத்துக்களுக்கு கூடுதல் வலு சேர்க்கும். 

  • எப்போதுமே ஃப்ரீயாக இருங்கள். கைகளை மடக்கி வைத்திருப்பது அல்லது கால்களை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பது போன்ற இறுக்கமான நிலைகளைத் தவிர்க்கவும். 

  • இது தவிர மற்றவர்களின் உடல் மொழியை கவனித்து அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் மற்றும் எப்படி உணர்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்.  

பயிற்சி செய்யுங்கள்: 

உங்கள் உடல் மொழியை மேம்படுத்த சிறந்த வழி அதை பயிற்சி செய்வதுதான். நண்பர்கள் குடும்பத்தினர் முன் பேசும்போது உங்கள் உடல் மொழியை நன்கு கவனியுங்கள். கண்ணாடியின் முன்னின்று உங்கள் உடல் மொழியை செய்து பாருங்கள். தேவைப்பட்டால் உங்கள் உடல் மொழியை மேம்படுத்த உதவும் ஒரு நிபுணரிடம் ஆலோசனை பெறவும். அல்லது youtube-லேயே இதற்காக பல்வேறு விதமான காணொளிகள் உள்ளன. அதைப் பார்த்து கற்றுக்கொண்டு உங்களது உடல் மொழியை சிறப்பாக மாற்றலாம். 

உங்கள் உடல் மொழியை சிறப்பாக மாற்றுவது மிகவும் எளிதானதுதான் என்றாலும் அதனால் ஏற்படும் தாக்கம் மிகப்பெரியது. உங்கள் உடல் மொழியை பயன்படுத்தி நீங்கள் நம்பிக்கையானவர், திறமையானவர், வெற்றிகரமானவர் என்பதை வெளிப்படுத்தலாம். இந்தப் பதிவில் நான் சொன்ன குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் உடல் மொழியை மேம்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள். 

வாழை இலை விருந்தின் நாகரிகம் தெரியுமா?

பிளாக் காபியின் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

மன அமைதியைத் தரும் அதிகாலை தியானம்!

ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

SCROLL FOR NEXT