People don't care about anyone.
People don't care about anyone. 
Motivation

உண்மைய சொல்லனும்னா, மக்கள் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!

கிரி கணபதி

இந்த பதிவை ஒரு அழகிய ஆங்கில Quote மூலமாகத் தொடங்கலாம் என நினைக்கிறேன். 

You’ve gotta dance like there’s nobody watching, Love like you’ll never be hurt, Sing like there’s nobody listening, And live like it’s heaven on earth.

இந்த ஆங்கில Quote எனக்கு மிகவும் பிடித்தது. இதை உங்களுக்கு நான் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பிறரை கண்டுகொள்ளாமல் நீங்கள் உங்கள் விருப்பம் போல இருங்கள் என்பது தான் இதன் அர்த்தம். 

என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் பிறர் நம்மை தவறாக judge செய்து விடுவார்களோ என்ற பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் எப்போது என்னுடைய Comfort Zone-ஐ உடைத்து வெளியே வந்து, மகளைப் பற்றிய பல புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டேனோ, அன்று முதல் வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றிலும் மாறிவிட்டது. 

உண்மை என்னவென்றால் நாம் எப்படி இருக்கிறோம், எவ்வளவு சம்பாதிக்கிறோம், என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி யாருக்கும் இங்கே கவலை இல்லை. அவரவருக்கு அவரவருடைய வாழ்க்கை பற்றிய சிந்தனைகளே அதிகம் ஓடிக்கொண்டிருக்கும். பிறர் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற எண்ணமானது நமக்குள்ளே தோன்றும் தேவையில்லாத எண்ணமாகும். ஒருவேளை தோற்று விட்டால் என்ன செய்வது? தவறாக நடந்து விட்டால் என்ன செய்வது? என்னை ரிஜெக்ட் செய்து விட்டால் என்ன செய்வது என்ற Fear of Failure மனநிலை நம்மை பல விஷயங்களைப் பற்றி தவறாக நினைக்க வைக்கிறது.

இதை நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் வாழ ஆரம்பித்து விடுவீர்கள். வெளியே செல்லும்போது மக்களிடம் சகஜமாக பழக முடியும். பிறருடைய கருத்துக்களை பிறருடைய கருத்துக்களாக மட்டுமே பார்க்க முடியும். அதை நம்முடைய வாழ்க்கையில் பொருத்தி மோசமான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள மாட்டோம்.

உங்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருப்பவர்கள், நீங்கள் உங்கள் வாழ்வில் எந்த திசையில் செல்ல வேண்டும் என வழி காட்டுவார்களே தவிர, மோசமாக உங்களை judge செய்ய மாட்டார்கள். 

நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், நம்மைப் பற்றி யாருக்கும் இங்கே கவலை இல்லை என்பது புரியும். எனவே சுதந்திரமாகவும். மகிழ்ச்சியாகவும் உங்கள் விருப்பம் போல உங்களுக்கு பிடித்தவற்றை செய்து கொண்டு நிம்மதியாக இருங்கள்.

யாருக்காகவும் எதற்காகவும் உங்களுடைய சுயத்தை இழந்து விடாதீர்கள். 

விரைவில் லோகேஷின் LCU ஷார்ட் பிலிம்... எப்போது தெரியுமா?

ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

SCROLL FOR NEXT