Past Memories.
Past Memories. 
Motivation

கடந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை மோசமாக்கிக் கொள்பவர்கள் ஜாக்கிரதை!

கிரி கணபதி

என்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கும்போது, அது எந்த அளவுக்கு என்னுடைய நிகழ்கால பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது என்னுடைய மோசமான கடந்த கால நிகழ்வுகள் இப்போது என் வாழ்க்கையை பயத்துடன் வாழ வைக்கிறது.

உதாரணத்திற்கு சிறுவயதில் யாரோ ஒருவர் என்னை “இவன் கூச்ச சுபாவம் உடையவன், அமைதியானவன்” என முத்திரை குத்தி பேசிய சில விஷயங்கள் என் மனதில் ஆழப்பதிந்து தற்போதைய என் பர்சனாலிட்டியை வேறு விதமாக மாற்றிவிட்டது. இப்படி தான் கடந்த காலத்தில் நடந்த பல விஷயங்கள் இப்போது என் வாழ்க்கையை முழுமையாக வாழவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. 

இது எனக்கு மட்டுமல்ல உங்களில் பலருக்கும் இதே நிலை இருக்கலாம். கடந்த கால நினைவுகளில் இருந்து மீள முடியாமல் உங்களுடைய நிகழ் காலத்தை மோசமாக்கி கொண்டிருக்கலாம். அவற்றிலிருந்து மீண்டு வந்து விரைவில் நிகழ்காலத்தில் நம்முடைய கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். 

உண்மையிலேயே கடந்த காலத்தில் நடந்த மோசமான சம்பவங்கள் என்பது, நம் நீண்ட காலம் நினைத்து பார்த்து கவலைப்பட வேண்டியது அல்ல. அதிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதற்கு அடுத்த காலகட்டங்களில் நம்மை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க பயன்படுத்த வேண்டியதாகும். எனவே இறந்த காலத்தை நினைத்து கவலைப்படுவது முற்றிலும் பயனற்றது.

நினைவுகள் என்பது தவறுகளை நினைவில் வைத்துக்கொண்டு இனி அதை செய்யாமல் பார்த்துக் கொள்ளத் தானே தவிர, அந்தத் தவறை மீண்டும் மீண்டும் நினைத்து எந்த முயற்சியும் செய்யாமல் முடங்கி விடுவதற்காக அல்ல. எனவே உங்களுடைய நினைவுகள் பற்றிய புரிதலை சரியாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

பலர் தங்களுடைய நிகழ்கால வாழ்க்கை மோசமாக இருப்பதற்கு கடந்த காலத்தில் நடந்த மோசமான சம்பவங்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் அவர்களின் குறையை மறைத்துக்கொண்டு, தன்னை நல்லவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள். 

உங்களில் எத்தனை பேர் நான் சொல்வது போல கடந்த கால சம்பவங்களால் நான் இப்போது மோசமாக இருக்கிறேன் என சொல்கிறீர்கள்? நீங்கள், நான் என அனைவருமே அப்படித்தான் பிறரிடம் கூறி நம்மை சிறப்பானவர்களாகக் காட்ட முயற்சிப்போம். 

இந்த உண்மையை நீங்கள் ஏற்றுக் கொண்டு, தற்போதைய மோசமான சூழ்நிலையிலிருந்து எப்படி வெளிவரலாம் அல்லது என்னுடைய வாழ்க்கையை மேலும் சிறப்பாக எப்படி மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்திப்பது தான் புத்திசாலித்தனம். 

அது மட்டும் தான் நமது வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருமே தவிர, கடந்த காலம் என்பது நிகழ் காலத்திற்கு எந்த வகையிலும் பயன்படாது.  

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT