Do you know the benefits of fragrant javvadu?
Do you know the benefits of fragrant javvadu? https://www.youtube.com
ஆன்மிகம்

ஜம்முன்னு மணக்கும் ஜவ்வாது பலன்கள் தெரியுமா?

நான்சி மலர்

ன்று நாம் பயன்படுத்தும் வாசனை திரவியங்களின் மணம் சிறிது நேரமே தாக்குப்பிடிக்கிறது. எத்தனை வாசனை திரவியம் வாங்கி பயன்படுத்தினாலும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிவதில்லை என்று சொல்பவர்கள் கண்டிப்பாக ஜவ்வாதுவின் பயன்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜவ்வாது சித்தர்களால் 1000 வருடத்திற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் வாசனை பொருளாகும். இதை ஆன்மிக குருக்கள் தங்கள் ஆன்மிகப் பயிற்சியை வலுப்படுத்துவதற்காகக் கண்டுப்பிடித்தனர். ஜவ்வாது சந்தனக்கட்டை, மூலிகைகள், நறுமணமிக்க மலர்களை கொண்டு செய்யப்படுகிறது. இதை கோயில்களில் அதிகமாக உபயோகப்படுத்துவார்கள். இந்த ஜவ்வாதுவை கோயில்களில் உள்ள மூலவருக்குப் பயன்படுத்தும்போது இறையாற்றல் அதிகரிக்கும். நாம் கோயில்களில் நுழையும்போதே நல்ல பாசிட்டிவ் எனர்ஜி, நல்ல நறுமணம் மூலவரிடமிருந்து வருவதைப் பார்க்கலாம். நாட்டு மருந்து கடைகளில் ஜவ்வாது பேஸ்ட் மற்றும் பவுடர் என்று இரண்டு வகையாகக் கிடைக்கின்றன.

இதுபோன்ற பொருட்களை கோயில்களில் பயன்படுத்தும்போது அங்கே எதிர்மறை சக்திகள் எதுவும் இருப்பதில்லை. நல்ல நறுமணம் இருக்கும் இடத்தில் இறையாற்றல் கண்டிப்பாக இருக்கும். அதனாலேயே நல்ல நறுமணத்தை கொண்ட கோயில்களில் இறையாற்றல் குடிக்கொண்டிருக்கிறது. அதேபோல இறையாற்றலை நம் வீட்டிற்கும் கொண்டு வருவதற்கு ஜவ்வாதுவை பயன்படுத்தலாம். சிவன் கோயிலுக்கும், கால பைரவருக்கும் ஜவ்வாதுவை சமர்ப்பிப்பதால் தொழில் மற்றும் வியாபார ரீதியாக இருந்து வரும் தடைகள் நீங்கும்.

வீட்டில் பூஜையறையில் இருக்கும் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைக்கும்போது அத்துடன் சிறிது ஜவ்வாதுவை கலந்து வைக்கவும். இதனால் வீட்டில் நல்ல இறையாற்றலை உணர முடியும். நல்ல நறுமணம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வார். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும். குளித்து முடித்த பின்பு உடையிலே சிறிது ஜவ்வாது தடவுவதால் நாள் முழுதும் வாசனையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம். குழந்தைகளின் துணியில் சிறிது ஜவ்வாது தடவுவதால் திருஷ்டி ஏற்படாது. இதை தியானம் செய்யும்போது பயன்படுத்தினால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும்.

வீட்டில் ஜவ்வாது விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமானது. வீட்டில் வெள்ளிக்கிழமையன்று சுக்ர ஹோரையில் சாதாரணமாக அகலில் நல்லெண்ணையிட்டு ஏற்றும் விளக்கில் கால் தேக்கரண்டி ஜவ்வாதுவையும் சேர்த்து தீபமேற்றினால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். வீட்டில் குலதெய்வம் வருவதற்கும், மனதில் இருக்கும் பயம் நீங்கவும் இந்த ஜவ்வாது தீபத்தை ஏற்றலாம்.

சித்தர்கள் பயன்படுத்தியதைப் பார்த்து இதன் பலன்களை அறிந்து அரசர்கள், மக்கள் என்று பலரும் ஜவ்வாதுவை பயன்படுத்தத் தொடங்கினர். இப்போதும் ஜவ்வாது தயாரிக்கப் பயன்படுத்தும் மூலிகை, பூக்கள் போன்றவை சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது. இருக்கமாக இருப்பவர்களையும் இதன் மணமானது மகிழ்ச்சியடைய வைக்கும். இத்தனை நன்மைகளை கொண்ட ஜவ்வாதுவை நீங்களும் வீட்டில் வாங்கி வைத்து பயன் பெறுங்கள்.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT