World's Best Tourist Destinations in Winter
World's Best Tourist Destinations in Winter 
பயணம்

Winter Seasonல் உலகில் சுற்றிப் பார்க்கவேண்டிய சுற்றுலா தலங்கள்!

பாரதி

டிஸ்னி நகரம் ஹால்ஸ்டாட்!

ஸ்திரியாவில் உள்ள ஹால்ஸ்டாட் எனும் இடம் ஒவ்வொரு பருவகாலத்திலும் ஒவ்வொரு விதமான அழகான சீனரிகள் காட்சிகள் சுற்றுலா பயணிகளை கவரும். குளிர்காலங்களில் பனி மூடிய அழகுடனும் வசந்த காலங்களில் பசுமை மற்றும் பழுப்பு நிறத்துடனும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் Frozen என்ற Disney படத்தில் உள்ள இடங்கள் இந்த அழகை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த இடம் கற்பனை கதைகளில் வருவது போல் வீடுகளும் தெருக்களும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஹால்ஸ்டாட் நகரத்தில் தான் மிகப் பழமையான உப்பு உற்பத்தி செய்யும் சுரங்கம் உள்ளது. குழந்தைகளுடன் சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் நிச்சயம் இந்த இடத்திற்குச் செல்ல ஆசைப்படுவார்கள்.

ஒளிகள் நிரம்பிய அலாஸ்கா!

து அமெரிக்காவில் உள்ள ஒரு குளிரான பகுதி. இந்த இடத்தில் aurora borealis எனப்படும் ஒரு துருவ ஒளி அடிக்கடி தோன்றும். வானில் வித்தியாசமாகப் பச்சை, ஊதா, நீலம் போன்ற கலவை பல நிறங்கள் தோன்றும். இது ஒரு இயற்கையின் அதிசய இடமாகும். அதுவும் அந்த வானிலை மாற்றம் நிகழும்போது அருவி, நதி அல்லது கடல் உள்ள இடத்திற்குச் சென்றுபார்ப்பது சொர்க்கத்தை விடவும் அழகுமிக்க ஒரு இடத்தை பார்ப்பது போல் இருக்கும்.

பசுமை நகரம் கோபன்ஹேகன்!

யற்கையும் நகரத்தின் கட்டடங்களும் சேர்ந்து போட்டி போட்டுக்கொண்டு பெஸ்ட் வியூவை தரும் ஒரு இடம்தான் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன். இந்த இடத்தில் டிவோலி பூங்கா, லிட்டில் மெர்மெய்ட் சிலை, அமலியன்போர்க் மற்றும் கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனைகள்,ரோஸன்பேர்க் கோட்டை போன்ற இடங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள். இந்த இடத்தில் உணவு, தங்கும் இடங்கள் ஆகியவை மற்ற இடங்களை விட விலை அதிகமாகவே இருக்கும்.

பனிகோட்டைகள் நிறைந்த கிருனா!

ஸ்வீடனில் உள்ள ஒரு பனி நகரம் தான் கிருனா. இந்த இடத்தில் பனி எப்போதும் இருப்பதால் சில கட்டடங்களும் சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்காகக் கோட்டைகளும் பனிகட்டிகளிலேயே வடிவமைத்திருப்பார்கள். கோட்டைக்குள் இருக்கும் அலங்காரப் பொருட்களும் பனிகள் மூலமாகவே வடிவமைத்திருப்பார்கள். கிருனா இடத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளாகக் கிட்டத்தட்ட 17 ஆயிரம் விலங்குகள் வாழ்கின்றன. சில நேரங்களில் இந்த இடத்திலும் aurora borealis ல் பச்சை நிறம் மட்டும் வானத்தில் தோன்றும்.

இனி கவலையே இல்லாமல் குளிர்காலங்களில் போதுமான பணம் வைத்துக்கொண்டு வீட்டிலேயே இல்லாமல் இந்த இடங்களுக்கு சென்று வாருங்கள். இயற்கை, நம் மனதை அமைதியாக வைத்துக்கொள்வதற்காகத்தான் இந்த இடங்களை நமக்காக கொடுத்திருக்கிறது.

வெந்நீரால் அபிஷேகம் செய்யப்படும் அதிசய சிவன் கோயில்!

சிறுகதை - ஸ்கூட்டர் ராணி!

மேல் நோக்கிச் செல்லும் அதிசய அருவிகள்!

அறிவிற்கு விருந்தாகும் டொராணோவின் 2 அருங்காட்சியகங்கள்!

Food for Hair Growth: முடி வளர Diet-ல் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்!

SCROLL FOR NEXT