Madurai
Madurai 
செய்திகள்

கோவையை அடுத்து மதுரைக்கும் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!

பாரதி

கோவையின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்கள் அறிவித்த நிலையில் தற்போது மதுரைக்கும் பல வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரையில் கடந்த சில மாதங்களாக எந்த முதலீடுகளும் வளர்ச்சித் திட்டங்களும் இல்லாத நிலையில், தற்போது இந்த ஒரு மாத காலமாக அடுத்தடுத்தத் திட்டங்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது பட்ஜட்தான். தமிழ்நாட்டில் மிக வேகமாக ஐடி நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. அதன் வளர்ச்சி மதுரையிலும் வர வேண்டுமென 345 கோடி ரூபாய் செலவில் 6.4 லட்சம் சதுரடிப் பரப்பளவில் டைட்டல் பார்க் அமைக்கும் திட்டத்தை பட்ஜட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதனையடுத்து முழு தென் தமிழகமும் எதிர்பார்த்த AIIMS மருத்துவமனையின் கட்டுமானத்தை 5 வருடங்களுக்குப் பிறகு லார்சன் & டூப்ரோ நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த கட்டுமானத்தை சுமார் 33 மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த வளாகத்தில் 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டடம், கல்லூரி, விடுதிகள், அலுவலகம் என அனைத்தும் கட்டப்படும்.

அதேபோல் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் ( JICA ) நிதியுதவியுடன் ரூ. 1,978 கோடி செலவில் மதுரைக்கு 13 கிமீ தொலைவில் தொப்பூர் என்ற இடத்தில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது.

இந்தத் திட்டங்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இன்னும் சில திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் வசதியைக் கொண்டு வர விரிவானத் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்குத் தமிழக அரசு டெண்டர் விட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 2வது பதிப்பான CITIIS 2.0 திட்டத்தில் இந்திய அளவில் 18 மாநகரங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அந்த 18 மாநகரங்களில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மற்றும் மதுரையும் தேர்வாகிவுள்ளன. இரண்டுமே கோவில் இடங்கள்  என்பது கூடுதல் சிறப்பு. இந்த இரண்டு மாநகராட்சிகளின் திடக்கழிவு மேலாண்மைக்கு CITIIS திட்டத்தின் கீழ் ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் தீக்கதிர் பாலம் மற்றும் சமயநல்லூர் சந்திப்பு இடையே இருக்கும் 8 கிமீ நீளம் கொண்ட வடக்கு அற்றங்கரைச் சாலை சுமார் 176 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கானப் பணிகள் விரைவில் அறிவிக்கப்படும். அதேபோல் மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களை இணைக்க மேலும் 50 மஃப்சல் பேருந்துகள் கொண்டுவரப்படவுள்ளன. அதேபோல் கூடுதல் டவுன் பஸ் சேவைகளும் அறிமுகம் செய்யவுள்ளன.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT