Vijayaprabhakaran 
செய்திகள்

This is not the end… Just a Beginning – விஜய பிரபாகரனின் இன்ஸ்டா ஸ்டோரி!

பாரதி

லோக்சபா தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றிபெற்றது. அந்தவகையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால், இன்ஸ்டா ஸ்டோரியில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

நடப்பு ஆண்டு 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. 7வது கட்டம் கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து நேற்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால், போட்டியின்றி வெற்றிபெற்றார். மற்ற 542 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலுமே திமுக அமோக வெற்றிபெற்றது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவரின் மொத்த வாக்குகள் 3,85,256 ஆகும்.

மேலும் இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 1,66,271 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் , விஜய பிரபாகரனைத் தவிர  அனைவரும் டெபாசிட் இழந்தனர். 

அந்தவகையில் விஜயபிரபாகரன் தனது இஸ்டா பக்கத்தில் பதிவிட்டதாவது, “Sorry guy lost by a very marginal difference… Thankyou to all the lovable hearts of Virudhunagar people who voted For me…This is not the end.. This is the beginning.. DMDK.. CAPTAIN” என்று பதிவிட்டார்.

அதாவது, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததற்கு மன்னியுங்கள். விருதுநகர் தொகுதியில் எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. இது முடிவல்ல, தொடக்கம், என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.  

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT