Cell phone overheating
Cell phone overheating 
அறிவியல் / தொழில்நுட்பம்

உங்க போன் 'ஓவர் ஹீட்' ஆகுதா? அப்போ இந்த 10 டிப்ஸ் உங்களுக்கு தான்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

முதலில் போன்கள் எப்போதெல்லாம் சூடாகும், சூடாக காரணங்கள் என்ன?

1) அதிக நேரம் வீடியோ பார்ப்பது.

2) கேம்கள் விளையாடும் போது.

3) நேரடியாக சூரிய ஒளி படுமாறு வைப்பது.

4) முழுவதும் சார்ஜ் ஆன பிறகும் கூட சார்ஜிலேயே போட்டு வைப்பது.

5) போனுக்கான சார்ஜரைத் தவிர வேறு சார்ஜரை உபயோகிப்பது என பல காரணங்கள் உள்ளது.

ஓவர்ஹீட் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்?

1) ஃபோனில் பிரைட்னஸை குறைத்து வைத்துக் கொள்வது போன் அதிகம் சூடாகாமல் இருக்க உதவும்.

2) போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட பிறகும் சில ஆப்ஸ்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். இது மெமரி, டேட்டா, பேட்டரி ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்துகிறது. போன் அதிகம் சூடாகும் போது பின்னணியில் எந்த பயன்பாடுகள் இயங்கினாலும் அவற்றை உடனடியாக நிறுத்தவும்.

3) தேவைப்படாத சமயங்களில் ப்ளூடூத்தை அணைத்து வைப்பது நல்லது.

4) தொடர்ச்சியாக இன்டர்நெட்டை பயன்படுத்தும் போது மொபைல் போன் எளிதில் சூடாகிவிடும். எனவே இடைவெளி விட்டு பயன்படுத்தவும்.

5) போனை சார்ஜ் செய்யும்போதே பேசுவது, யூடியூப் பார்ப்பது ஆகியவை ஃபோனை விரைவில் சூடாக்கி விடும். இதற்கு சிறிது நேரம் ஆஃப் செய்து வைப்பது சூட்டை குறைக்க உதவும்.

6) சூரிய ஒளி நேரடியாக தொலைபேசியில் விழுந்தால் ஸ்மார்ட் ஃபோன்கள் விரைவில் சூடாகும். எனவே நேரடி சூரிய ஒளியில் படாமல் தள்ளி வைக்கலாம்.

7) கோடையில் சுற்றுப்புற சூழல் மிகவும் வெப்பமாக இருப்பதால் போன் அதிக அளவில் சூடாகும். குளிர்காலத்தை விட கோடை காலத்தில் இந்தப் பிரச்சனை அதிகம் உண்டாகும்.

8) ஸ்மார்ட் ஃபோன்களை நீண்ட நேரம் உபயோகித்தால் சூடாகிவிடும். இதற்கு சிறிது நேரம் இடைவெளி விட்டு பயன்படுத்தலாம். அத்துடன் ஃபோன்களை அதன் கவரிலிருந்து எடுத்து தனியாக சிறிது நேரம் வெளியே வைக்க சூடு குறையும்.

9) போனை அதிகமாக சார்ஜ் செய்வதும் சூடாக்கிவிடும். போன்களுக்கு என்று தனியாக பலவகையான குளிர்விக்கும் மின்விசிறிகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை உபயோகித்து ஸ்மார்ட்போன்களை சூடாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

10) அதிக சூடானால் செல்போன்கள் வெடித்து விடும் அபாயம் உள்ளது. எனவே அளவோடும் தகுந்த பாதுகாப்போடும் பயன்படுத்துவது நல்லது.

இவற்றையெல்லாம் செயல்படுத்தினாலே போன் சூடாகும் பிரச்சனையை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.

‘மாஸ்க்’ படத்தில் இணையும் கவின் மற்றும் ஆண்ட்ரியா!

வரலாற்றுக் களஞ்சியங்களாகத் திகழும் அருங்காட்சியகங்கள்!

வாழ்க்கையில் முன்னேற முதல்படி திட்டமிடல்தான்!

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

SCROLL FOR NEXT