உடல் அசைவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஸ்மார்ட் தளத்தை கண்டுபிடித்துள்ளது லண்டன் நிறுவனம்.
எரிபொருட்கள் மூலமாகவும், சூரியன், காற்று, தண்ணீர் என்று பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்ட மின்சாரம். தற்போது மனித உடல் அசைவுகள் மூலம் தயாரிக்கும் முயற்சியை லண்டனைச் சேர்ந்த ஸ்டேட்டஸ் நிறுவனம் தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிறுவனம் மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யும் ஸ்மார்ட் தளத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ஸ்மார்ட் தளத்தில் நடப்பது மூலமாகவும், அதிக அளவில் அழுத்தம் தருவதன் மூலமாகவும், மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. குறிப்பாக ஒரு மனிதர் நடக்கும் பொழுதுக்கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக இரண்டு முதல் ஐந்து ஜூல் மின்சாரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மிக குறைந்த அளவு தான் என்றாலும் அதிக மக்கள் நடைக்கக்கூடிய வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற மக்கள் நடமாடும் இடங்களில் அவற்றை பொருத்துவதன் மூலம் அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
பிரான்சில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் இந்த ஸ்மார்ட் தளம் அமைக்கப்பட்டு பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நான்கு பேர் கொண்ட ஒரு வீட்டிற்கு தேவையான 10 நாள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கண்டுபிடிப்பு வருங்காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.