images.firstpost.com
விளையாட்டு

மூன்றில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிக்கண்ட ஆஸ்திரேலியா அணி!

பாரதி

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் மூன்றுப் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி எளிதாக அந்த வெற்றி வாய்ப்பை ஆஸ்திரேலியா அணிக்குக் கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இம்மாதம் 14 முதல் 17ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி நான்காவது நாள் முடிவிலேயே 360 ரன்கள் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் அணியை வென்றது. அந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக மிட்சல் மார்ஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனெனில் மார்ஷ் முதல் இன்னிங்ஸில் அவுட் கொடுக்காமல் 90 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் அவுட் ஆகாமல் 63 ரன்களும் எடுத்தார்.

இரண்டாவது போட்டி MCG மைதானத்தில் 26ம் தேதி தொடங்கி இன்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 318 ரன்களுடன் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. அடுத்ததாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி 264 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணி பதிலடிக் கொடுக்க வேண்டும் என்றே வெறித்தனமாக களமிறங்கியது.

பாகிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை ஆஸ்திரேலியா அணியால் சமாளிக்கவே முடியவில்லை. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதாவது ஆஸ்திரேலியா அணி 16 ரன்கள் எடுப்பதற்குள்ளேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் மிட்சல் மார்ஷ் 96 ரன்களும் அலெக்ஷ் கேர்ரி 53 ரன்களும் எடுத்தனர். அதேபோல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஹம்சா மற்றும் அஃப்ரிடி தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 262 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி 317 ரன்கள் இலக்கில் விளையாடியது. முதலில் களமிறங்கிய அப்துல்லா ஷபிக் மற்றும் உல் ஹக் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய ஷான் மகசூத் 7 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். சல்மான் அலி அகா 70 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் கடும் முயற்சி எடுத்தும் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியையே சந்தித்தது.

பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இரண்டாவது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுவே பாகிஸ்தான் அணியின் ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT