தெருவோரங்களிலும், வயல்களிலும் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் மூக்கிரட்டைக் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும்.
மூக்கிரட்டை செடி கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை உடலில் இருந்து முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் ஒரு அபூர்வ மூலிகையாகும். புற்றுநோய் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கக்கூடியது இந்த மூக்கிரட்டை.
மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மையாக அரைத்து, 2 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி பூரணமாக குணமாகும்.
மூக்கிரட்டை கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் இது கட்டுப்படுத்தும்.
மூக்கிரட்டை வேரைத் தூளாக்கி, அதை தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர, மங்கலாகத் தெரியும் கண் பார்வைக் குறைபாடு மற்றும் மாலைக்கண் பாதிப்புகள் போன்ற கண் வியாதிகள் யாவும் விலகி விடும். கண் பார்வை கூராகும்.
மூக்கிரட்டை வேரோடு மிளகு சேர்த்து, விளக்கெண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அரைத் ஸ்பூன் அளவு பருக, சரும நோய்கள் குணமாகும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், அதை கரைத்துவிடும் தன்மை கொண்டது இந்த மூக்கிரட்டைக் கீரை. மூக்கிரட்டை இலைகளை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வர, ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.
மூக்கிரட்டையுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் குறையும். மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் நீர் தேங்கி வயிறு பெருத்து காணப்படும். அந்த நீரை வெளியேற்ற மூக்கிரட்டை உதவுகிறது.