இரவு நேர குளியல் https://news.lankasri.com
ஆரோக்கியம்

இரவில் குளித்தால் இந்த 7ம் கிடைக்குமா?

கல்கி டெஸ்க்

சித்திரை மாதம் தொடங்கி, தற்போது கோடை வெயிலின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தினந்தோறும் ஒருமுறை அல்லது இரண்டு, மூன்று முறை குளித்தால்தான் வெயிலை சமாளிக்க முடியும் போலிருக்கிறது. தினசரி காலையில் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இரவில் குளித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து இங்கு பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கவலையே வேண்டாம், இரவில் குளிப்பதால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளை இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.

1. இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்: உங்கள் உடலின் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர உறங்கச் செல்வதற்கு முன்னர் குளிப்பது மிகவும் நல்லதாகும். இரவில் குளிப்பதன் காரணத்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

2. உடல் சருமத்திற்கு நன்மை அளிக்கும்: இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னதாக, ஒரு முறை குளித்து விட்டுச் சென்றால், சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சுத்தமாகும். மேலும், உடலில் இருக்கும் அனைத்து வகையான பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அகற்றி விடும். இதன் காரணமாக நமது உடலில் பாக்டீரியா தொற்று மற்றும் சருமப் பிரச்னைகள் நம்மை நெருங்காது.

3. உடல் வெப்பத்தைக் குறைக்கும்: உடலின் வெப்பத்தை சீராக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, இரவில் ஒருமுறை குளிப்பது மிகவும் அவசியமாகும்.

4. மன அழுத்தத்தைக் குறைக்கும்: பலர் வேலை மற்றும் குடும்ப சூழல்களில் சிக்கித் தவிப்பதால், மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்கின்றனர். இவர்களைப் போல மன அழுத்தத்தில் சிக்கித் தவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட, இரவில் தூங்குவதற்கு முன்னதாக குளிப்பதே மிகச் சிறந்த வழியாகும். இவ்வாறு குளிப்பது, மூளையின் சிறந்த செயல்பாட்டிற்கு பெரிதளவில் உதவுகிறது.

5. உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறும்: இரவில் தூங்குவதற்கு முன் குளித்தால், உடனேயே நம் மனதும், உடலும் புத்துணர்ச்சி அடையும். இதன் உதவியால் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டில் இருந்தும் மன அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது. மேலும், இரவில் நன்றாகத் தூங்கவும் உதவுகிறது.

6. உடல் எடையைக் குறைக்கும்: தூங்குவதற்கு முன்பு குளிப்பது, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

7. வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்: இரவு நேரத்தில் குளிப்பதால் மூட்டு வலி, ஒற்றைத் தலைவலி, பெரிய தசைப்பிடிப்பு மற்றும் உடல் வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.

ஆகவே, அளப்பரிய பல நன்மைகள் கிடைப்பதன் காரணத்தால், இரவில் தூங்குவதற்கு முன்பு குளிக்க மறக்க வேண்டாம். அதிலும், கோடை வெப்பம் சுட்டெரிக்கும் இந்நாட்களில் இரவில் குளிப்பது, நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதுதான் சிறந்த ஆரோக்கிய நடைமுறைகளில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

- ரா.வ.பாலகிருஷ்ணன்

முதலில் கற்றுக் கொள்வோம் பின்பு பெற்றுக் கொள்வோம்!

எதை நோக்கிச் செல்கிறது மனித சமுதாயம்? சக மனிதர் மேல் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?

Seneca Quotes: தத்துவஞானி செனிக்கா வாழ்க்கைப் பற்றி கூறிய 15 பொன்மொழிகள்!

தசை நார் சிதைவு (Muscular dystrophy) என்றால் என்ன? குணப்படுத்த முடியுமா?

நீங்கள் செய்வதை சந்தோஷமாக செய்தால் வெற்றி உங்களைத் தாவி வரும்!

SCROLL FOR NEXT