Benefits of Drinking Grape Juice in Summer
Benefits of Drinking Grape Juice in Summer https://vaya.in
ஆரோக்கியம்

கோடைக்காலத்தில் கிரேப் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆஹா பலன்கள்!

ஆர்.ஜெயலட்சுமி

கோடைக்காலத்தில் திராட்சை சாறு குடிப்பதால் நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் புத்துணர்ச்சியும் ஏற்படும். திராட்சையில் கருஞ்சிவப்பு, சிவப்பு, கருப்பு, பன்னீர் திராட்சை என பல வகை உண்டு. இவை தவிர, புளிப்புச் சுவையிலும் திராட்சை கிடைக்கும். எல்லா வகையான திராட்சை பழத்திலும் வைட்டமின் ஏ அதிக அளவிலும், வைட்டமின் பி2, ஆண்டி ஆக்சிடென்ட், இரும்புச் சத்து,  பொட்டாசியம் போன்ற உலோக சத்துக்களும் ஏராளமாக உள்ளன. அனைத்து வகை திராட்சைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

திராட்சையின் அதிகப்படியான வேதியல் மூலம் மற்றும் பாலிஃபீனால் என்று சொல்லப்படக்கூடிய ஆண்டி ஆக்சிடென்ட் இதய தசைகளை வலிமையாக்குவதோடு, இதயத்தில் அடைப்பு உண்டாக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை கரைத்து சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே, திராட்சை இதய சம்பந்தமான பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது.

திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் இருப்பதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி, கேன்சர் செல்களை நேரடியாக அழிக்கக்கூடிய ஆற்றல் மூலப்பொருள் இதில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. கேன்சர் வராமலும் அல்லது ஆரம்ப நிலை புற்றுநோய்க்கு தினமும் இப்பழத்தின் ஜூஸ் குடித்து வந்தால் விரைவில் குணமாக்க முடியும். பெண்களுக்கு சுரக்கும் ஹார்மோன் மாற்றத்தை சீர்படுத்தி மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

பல பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது மாதவிடாய் கோளாறுதான். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு மாதவிலக்கு தள்ளிப்போகுதல் அல்லது அதிகமான உதிரப்போக்கு அல்லது குறைந்த நாட்களில் மிகக் குறைவாக இரத்தப்போக்கு போன்ற பல சூதகக் கோளாறுகளுக்கு திராட்சை பழச்சாறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாதவிலக்கு கோளாறுகளை குணப்படுத்த கருப்பு திராட்சை சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.

திராட்சை பழச் சாறு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடலில் வைட்டமின் சி சத்து கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ஒற்றைத் தலைவலி பிரச்னை சரியாகிறது. உடற்பயிற்சி செய்துவிட்டு திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதய தசைகளை மேம்படுத்தி இரத்த ஓட்டத்தினை சீராக்கும். திராட்சை சாற்றினால் முகம் கழுவி வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவாகும்.

திராட்சை பழச்சாறை இரவு நேரத்தில் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம், திராட்சை பழத்தின் சத்துக்களால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதால் இரவு வேளைகளில் திராட்சை பழச் சாறு சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்னை இருப்பவர்கள் வெறும் வயிற்றில் திராட்சை பழச்சாற்றை சாப்பிட வேண்டாம். வாய்வுத் தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT