தினமும் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் போலவே படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதாலும் பல நன்மைகள் கிடைப்பதோடு, உடலுக்குத் தேவையான வலிமையும், சக்தியும் கிடைக்கிறது.
தினசரி படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதால் இதயத்தின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் மாரடைப்பு, நெஞ்சு வலி போன்றவை ஏற்படாது. உடலில் கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை குறையும். படிக்கட்டுகளை உபயோகிப்பதால் கால் தசைகள் வலிமை பெற உதவும். நடைப்பயிற்சியில் பெறும் அதே நன்மைகளை படிக்கட்டில் ஏறி இறங்குவதாலும் பெறலாம்.
படியில் ஏறிச் செல்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் எளிதாகக் கரைய வைக்கும். மன அழுத்தத்தோடு இருப்பதாக நினைத்தால் படிக்கட்டுகளில் அரை மணி நேரம் ஏறி இறங்க, மன அழுத்தம் குறைவதுடன், உடலுக்கும் புத்துணர்வைத் தரும். உடல் இரத்தத்தை வேகமாக உந்துதலால் மன பதற்றத்தைக் குறைத்து மனதை சாந்தப்படுத்துகிறது.
படிக்கட்டுகளை உபயோகிப்பதால் மனதில் சகிப்புத்தன்மை வளர்வதாக சொல்லப்படுகிறது. படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது முதுகு மற்றும் கழுத்து நேராக்கப்படுகிறது.
எனவே, படிக்கட்டுகளில் ஏறும்போது உடலை வளைக்காமல் இருக்கப் பழக வேண்டும். இதனால் முதுகு வலி, கால் வலி மற்றும் இடுப்பு பகுதியின் வலிகள் வெகுவாகக் குறைந்து உடல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய ஏதுவாக இருக்கும்.
மூட்டுவலி உள்ளவர்கள் குறைந்த படிக்கட்டுகளை உபயோகித்து ஏறி, இறங்கி பயிற்சி செய்ய, வலி குறைந்து மகிழ்ச்சியாக இருக்கலாம். வயிற்றுத் தசைகளுக்கு பயிற்சியாக, உடல் எடையை பேணும் வகையில் படிக்கட்டுகளை உபயோகிப்போம். உடல் ஆரோக்கியம் காப்போம்.