Do you know the health benefits of black carrots?
Do you know the health benefits of black carrots? 
ஆரோக்கியம்

கருப்பு நிற கேரட்டில் உள்ள ஆரோக்கிய குணம் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

சீனாவிலும், வட  இந்தியாவின் சில மாநிலங்களிலும், கர்நாடகாவிலும் பரவலாகப் பயிரிடப்பட்டு சமீப காலமாக  மார்க்கெட்டுக்கு வந்துகொண்டிருக்கும் காய் இந்த கருப்பு நிற கேரட்! அடர் வைலட் மற்றும் கருமை நிறம் கொண்டவை. ப்ளூ பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பழங்களுக்கு நிறம் கொடுக்கும் நிறமியே இந்தக் கேரட்களிலும் உள்ளதால், இந்த நிறங்களில் இவை உருவாகின்றன.

‘அன்தோசியானின்’ என்ற ஆன்டி ஆக்சிடன்ட்டும், வைட்டமின் A, C, K, பொட்டாசியம், கரையக்கூடிய நார்ச்சத்து போன்ற பல வகை ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இவற்றின் மூலம் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் குறைக்கப்படுகிறது; நாள்பட்ட வியாதிகளினால் வரும் அபாயம் குறைகிறது; ஜீரண உறுப்புகளின் செயல்பாடு மேம்படுகிறது; மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது; அதிகப்படியான  கொழுப்பின் அளவு குறைகிறது; உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.

இவை மட்டுமின்றி, உடலில் ஏற்படும் வீக்கம் குறைகிறது; கண் நோய் குணமாகிறது; உடல் எடை குறையவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் இது  உதவுகிறது.

பிளாக் காரட் ஜூஸ் குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. பிளாக் காரட்டின் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையை தலையில் தேய்க்கும்போது உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு நீங்குகிறது. இதை ஜூஸ் செய்தும், சாலட்களில் சேர்த்தும், பொரியலாக சமைத்தும் உண்ணலாம்.

சிவப்பு, ஆரஞ்சு நிற கேரட்களில் உள்ளதைவிட சற்று அதிகமான கரோட்டினாய்ட் சத்துக்கள் கருப்பு நிற கேரட்டில் உள்ளன. எனவே, கருப்பு நிற கேரட்களையும் உணவோடு சேர்த்து உண்ணப் பழகுவோம்... உடல் ஊட்டம் பெறுவோம்.

ரொம்ப tired-ஆ இருக்கு...ஒரு நாள் லீவு கிடைக்குமா?

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

முதுகுத் தண்டுவட பிரச்னைகளைத் தீர்க்கும் பிரண்டை!

SCROLL FOR NEXT