Eight Foods You Should Say Goodbye To Delay Aging
Eight Foods You Should Say Goodbye To Delay Aging https://www.tastingtable.com
ஆரோக்கியம்

முதுமையை தள்ளிப்போட குட்பை சொல்ல வேண்டிய எட்டு உணவுகள்!

எஸ்.விஜயலட்சுமி

யதான காலத்தில் கூட இளமையாகத் தோற்றமளிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது? ஆனால், வயதாக வயதாக சருமம் சுருங்கி சுருக்கம் அடைந்து வயதான தோற்றம் வெளியில் தெரியும். ஆனாலும் சில உணவு வகைகளை கட்டாயமாக தவிர்ப்பதன் மூலம் முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடலாம்.

நாம் என்ன உணவு எடுத்துக்கொள்கிறோமோ அது நமது சருமத்தையும் பாதிக்கவே செய்கிறது. நல்ல சத்தான உணவுகள் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கும். சில உணவுகள் சருமத்தை வறட்சியாக்கி விரைவில் முதுமைத் தோற்றத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அந்த வகை உணவுகள் எவை என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. காபி: காபியில் உள்ள காஃபினுடன் சர்க்கரையும் சேரும்போது அது எதிர்மறையான விளைவுகளைத் தருகிறது. ஒரு நாளில் இரண்டு முறை காபி பருகுபவர்களின் சருமம் சீக்கிரமே முதுமை அடைகிறது. உலர்ந்த சருமம் வயதாவதை குறிக்கிறது. அத்துடன் நீர்ச்சத்தும் குறையும்போது சருமம் இன்னும் உலர்ந்து விடும். அப்படிப்பட்ட சரும அமைப்பு உள்ளவர்கள் காபி குடிப்பதை நிறுத்தி விடலாம். மேலும், மனித உடலின் இளமையை தக்கவைக்கும் கொலாஜன் என்கிற புரத உற்பத்தியைத் தடுக்கும் வல்லமை பெற்றது காபி என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.

2. இனிப்பு வகைகளும் வெள்ளை சர்க்கரை சேர்ந்த பானங்களும்: வெள்ளை சர்க்கரை உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை மட்டுமல்ல, வயதான தோற்றத்தையும் அளிக்கிறது. அதிக வெள்ளை சர்க்கரை சேர்ந்த சோடா, ஐஸ்கிரீம், இனிப்பு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக அளவு நீர் பருக வேண்டும்.

3. மது அருந்துதல்: மது அருந்துபவர்களின் முகத்தைப் பார்த்தாலே வயதான தோற்றத்தை காட்டிக் கொடுத்து விடும். முகத்தில் கன்னத்து சதைகள் தொங்கி இருக்கும். இதைத் தவிர்க்க வேண்டும்.

4. உப்பு மற்றும் மசாலா உணவுகள்: தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், உப்பு போட்ட வறுத்த உலர் பழங்கள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். இவற்றில் அதிகமான சோடியமும் இருக்கும். இதற்கு பதிலாக சாதாரண உலர் பழங்களை உண்ணலாம். புதிய பழங்களை வாங்கி உண்ணலாம். ஃபிரஷ் ஆன காய்கறிகள், கடல் உணவுகளை உண்ணலாம்.

5. வறுத்துப்பொறித்த உணவுகள்: நமது சருமத்தை சேதப்படுத்தி முதுமை தோற்றத்தை அளிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை வறுத்து பொறித்த உணவு வகைகள். தற்போது நிறைய பேர் இந்த மாதிரி உணவைத்தான் விரும்பி உண்கிறார்கள். டீப் ஃப்ரை செய்யப்பட்ட சிக்கன், மீன், வடை, பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை எப்போதாவது மிதமாக எடுத்துக் கொள்ளலாம். வேகவைத்து உண்பதில் தவறில்லை. எண்ணெயில் வறுத்து, பொறித்தோ உண்ணும்போது சுவை வேண்டுமானாலும் கிடைக்கும். கூடவே முதுமையும் சேர்ந்தே கிடைக்கும்.

6. கருகிய உணவு வகைகள்: பர்கர் போன்ற உணவுகளில் படிந்திருக்கும் ஹைட்ரோ கார்பன்கள் கொலாஜன் உற்பத்தியை சேதப்படுத்தும். பார்பிக்யூ உணவுகள் மற்றும் கிரீல்ட் சிக்கன், பிரான், மட்டன் வகை உணவுகளை உண்ணும்போது மிகவும் கருப்பாக தீயில் வாட்டப்பட்டு இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது. இது புற்றுநோயை வர வைப்பதுடன் முதுமையையும் இருகரம் நீட்டி வரவேற்கிறது.

7. சிவப்பு இறைச்சி: ஆடு, மாடு, பன்றி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள், ஃப்ரீரேடிகல்ஸ் உற்பத்தி செய்கின்றன. இவை உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும் வல்லமை பெற்றவை. அது மனிதனுடைய சருமத்தையும் பாதித்து கொலாஜன் உற்பத்தியும் சேதப்படுத்தி முதுமை தோற்றத்தை அளிக்கிறது. எனவே, இவற்றை ஆசைக்கு எப்போதாவது உண்டு விட்டு தோல் இல்லாத கோழிக்கறி சாப்பிடலாம்.

8. நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் கலந்த உணவுகள்( ட்ரான்ஸ் ஃபேட்): ட்ரான்ஸ் கொழுப்பு (நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்) கலந்த உணவுகள் கெட்ட கொழுப்பை உடலில் உற்பத்தி செய்வதுடன், அது இதய நோயையும் கொண்டு வருகிறது. மைதா சேர்க்கப்பட்ட பேக்கரி வகை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகம் ட்ரான்ஸ் கொழுப்பு இருக்கிறது. இவற்றை தவிர்க்க வேண்டும். நாம் உணவுப் பொருட்களை கடையில் வாங்கும்போது அதனுடைய வெளிப்புறத்தில் செயற்கை கொழுப்பு கலக்கப்பட்டு இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

உங்களுக்கு தைராய்டு இருக்கா? ப்ளீஸ் இந்த உணவுகள் வேண்டாமே!

30 வயதிற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 உண்மைகள்! 

சிறுகதை – சலனம்!

கோடைகாலத்தில் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க சூப்பர் டிப்ஸ்! 

Mummy: கையை முகத்துடன் இணைத்து கட்டியப்படி கண்டுபிடிக்கப்பட்ட மம்மி!

SCROLL FOR NEXT