Natural Ways To Get Rid Of Burn Scars!
Natural Ways To Get Rid Of Burn Scars! 
ஆரோக்கியம்

தீக்காய தழும்புகளை இயற்கையாக நீக்கும் முறைகள்! 

கிரி கணபதி

தீயினால் ஏற்பட்ட தழும்புகள் அல்லது அலர்ஜி மற்றும் விபத்து காரணமாக ஏற்படும் தழும்புகளை நீக்குவது கடினம். அதிக நபர்களுக்கு இந்தத் தழும்புகளை நீக்க முடியாத வடுக்களாக மாறிவிடுகிறது. அதிலும் பெண்கள் சமைக்கும்போது சுட்டுக் கொள்வது, துணிகளை அயன் செய்யும்போது சூடு படுவது போன்றவற்றால் தழும்புகளைப் பெறுகிறார்கள். என்னதான் இந்தத் தழும்புகளை நீக்குவதற்கு பல கிரீம்கள் கடைகளில் விற்றாலும், அவை பலன் தருவதில்லை. ஆனால் இவற்றை சில இயற்கை முறைகளைப் பின்பற்றிய நாம் போக்க முடியும். இந்த முறைகளினால் தழும்புகளை மங்கச் செய்து மறைய வைக்கலாம். 

கற்றாழை ஜெல்: தீக்காய தழும்புகளை மறையச் செய்வதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறந்ததாகும். அந்த ஜெல்லை தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும். மேலும் அந்த இடமும் மென்மையாக மாறும்.

தக்காளி சாறு: தக்காளியில் தழும்புகளை மறையச் செய்யும் விட்டமின்கள் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுவதும் நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். எனவே தழும்புகள் உள்ள இடத்தில் தக்காளி சாறு தடவி தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.

ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதைப் பயன்படுத்தி தழும்புகளையும் நீக்கலாம். எனவே தீக்காயம் பட்ட இடத்தில் தினசரி இந்த எண்ணெயை தடவி வந்தால் தழும்புகளின் தன்மை மாறி மறைந்துவிடும். 

எலுமிச்சை சாறு: சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்கள் தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்குவதற்கு சிறந்ததாகும். அதிலும் எலுமிச்சை சாறு நல்ல பலனளிக்கும். எனவே தினசரி தீக்காயம் பட்டு தழும்பு உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் விரைவில் குணமடையும். தீக்காயம் பட்டதும் எலுமிச்சை சாறு தேய்பதைத் தவிர்க்கவும். 

பால்: பாலில் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது என்பது நாம் அனைவருக்குமே தெரியும். எனவே தினசரி குளிப்பதற்கு முன் தழும்பு உள்ள இடத்தில் பாலை தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து பின் குளித்தால், கொஞ்சம் கொஞ்சமாக தழும்பு மறைய ஆரம்பிக்கும். 

இப்படி இயற்கையான முறைகளைப் பின்பற்றி தழும்புகளை நாம் மறையச் செய்யலாம். இவற்றை நீண்ட காலம் நீங்கள் செய்தால் மட்டுமே தழும்புகள் மறையும். உடனடியாக ரிசல்ட் கிடைக்க வேண்டும் என நினைக்காதீர்கள்.  

60 + வயது... அழகு நிலையம் செல்வது எதற்கு?

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்வோம்!

அப்பர் மிடில் கிளாஸ் மக்கள் இவங்கதானா?

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT