Nine health benefits of drinking cashew milk! https://manithan.com
ஆரோக்கியம்

முந்திரி பால் அருந்துவதால் கிடைக்கும் ஒன்பது ஆரோக்கிய நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ல்மண்ட் மில்க், சோயா மில்க், ஓட் மில்க், முந்திரி மில்க் போன்ற தாவரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பால் வகைகளில் முந்திரி பால் தயாரிப்பது சிறிது சுலபம் என்றே கூறலாம். ஒரு கப் முந்திரி பருப்பை ஊற வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மசிய அரைத்து மேலும் இரண்டு கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து கலந்த பின் அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், சிறிது உப்பு மற்றும் வெண்ணிலா எஸ்ஸன்ஸ் சேர்த்தால் காஜு மில்க் ரெடி.

இனி, இதை அருந்துவதால் கிடைக்கும் ஒன்பது விதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பசும் பாலுடன் ஒப்பிடும்போது இதில் கலோரி அளவு குறைவு; கொழுப்புச் சத்தும் குறைவாகவே உள்ளது.

எடை பராமரிப்பில் கவனம் செலுத்துவோருக்கு ஏற்ற உணவு இது.

முந்திரி பருப்பில் லாக்டோஸ் இல்லாததால், லாக்டோஸ் சகிப்புத் தன்மையற்றவர்களும், பால் பொருள் அலர்ஜி உள்ளவர்களும் கூட இதை உட்கொள்ளலாம். இதிலுள்ள மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு இதயத்துக்கு ஆரோக்கியம் தரும்; LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.

பசும்பாலை விட காஜு மில்க் சுலபமாக செரிமானம் ஆகக் கூடியது. செரிமானக் கோளாறு உள்ளவர்கள் கூட இந்தப் பாலை தாரளமாக அருந்தலாம்.

மார்க்கெட்டில் கிடைக்கும் சில வகை காஜு மில்க்கில் கால்சியம் மற்றும் வைட்டமின் D செரிவூட்டப்பட்டுள்ளதால், இது வலுவான எலும்புகளைப் பெறவும் உதவுகிறது.

இதில் வைட்டமின் E போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால், இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைத்து மொத்த உடலுக்கும் ஆரோக்கியம் தருகிறது.

ஃபிரி ரேடிகல்ஸ் மூலம் உண்டாகும் செல் சிதைவைத் தடுத்து சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

மேலும், முந்திரி பருப்பில் வைட்டமின் B12, ரிபோஃபுளேவின், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துக்களும் அடங்கியுள்ளதால் காஜு மில்க் அருந்துவதால் மொத்த உடம்பும் ஆரோக்கியம் பெறும்.

பசும் பால் மட்டுமே ஆரோக்கியம் தரும் என்ற கொள்கையிலிருந்து சற்று விலகி, தாவரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் பாலிலும் வெவ்வேறு  நன்மைகள் அடங்கியுள்ளதை உணர்வோம்; ஆரோக்கிய மேன்மையடைவோம்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT