சிறுகதை: வல்சி....!

பசி மற்றும் உணவின் மதிப்பை உணர்ந்த தொழிலதிபரின் சிறுகதை.
சிறுகதை | A injured man is eating in the marriage hall
சிறுகதை | A injured man is eating in the marriage hallImage credit: Chatgpt
இரா. ரகுராமன்

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இரா. ரகுராமன், தற்போது சென்னையில் வசிக்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் 23 ஆண்டுகளாகப் பணியாற்றிய அனுபவம். தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட ரகுராமன், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் திரைக்கதைகள் எழுதி வருகிறார். இவரது கவிதைத் தொகுப்பு இணையப் பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. ஆனந்த விகடன் வாசகர் பக்கத்திலும் படைப்புகள் வெளிவந்துள்ளன.

Updated on: 
MM strip
MM strip

“பிரேக்ஃபாஸ்ட் ரெடியாக இருக்கு சார்… மேடம் அழைக்கிறாங்க சார்...” என்று பணிப்பெண் கதவுக்குள் தலைகாட்டினாள்.

விக்ரம், ஜூம் கால்-இல் அமர்ந்தபடி, சற்று எட்டி பார்த்தான்.

“டென் மினிட்ஸ்… ஐ வில் பி பேக்…” என்று சொல்லிவிட்டு, அவளை வெளியே அனுப்பிவைத்தான்.

இந்தியாவெங்கும் பரந்த விரிந்த பிஸ்னஸ் பேரரசை கொண்டவன் விக்ரம். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவனது கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எப்போதும் 'பிசினஸ்… பிசினஸ்…' என்றே சுழன்றுகொண்டிருப்பான். அவனுக்கு பிசினஸ் தவிர வேறு உலகமே இல்லை.

ஜூம் கால் நடுவில் இருந்தபடியே, “இதோ பத்து நிமிடம் வருகிறேன்,” என பணிப்பெண்ணிடம் சொன்னான்.

அப்புறம் எதிர்புறத்தில் இருந்த கிளையன்ட் மெதுவாகச் சொன்னார்:

“ஓகே விக்ரம்… கோ அஹெட் அண்ட் டேக் யுவர் பிரேக்பாஸ்ட். வீல் மீட் யூ ஆப்டர் ஹாஃப் அவர்.”

விக்ரமின் புருவங்கள் சுருங்கின. கோபம் முகத்தில் பீறிட்டது.

மனைவியை நோக்கிக் கத்தினான்:

“சாப்பாடுதான் உனக்கு முக்கியமா இப்போ? முக்கியமான பிஸ்னஸ் மீட்டிங்கு நடக்கும்போது, அதுக்குள்ள சாப்பாடு பத்தி சொல்லி மீட்டிங்கையே கேன்சல் பண்ணிட்டியே மறுபடியும் அப்பாயிண்ட்மெண்ட் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

மனைவி மெதுவாக: “இல்லங்க… சாப்பிட்டுட்டு வேலை கன்டினியூ பண்ணுங்க…”

விக்ரம் சீறினான்:

“யூ டோன்ட் நோ அபௌட் மை அர்ஜென்சி அண்ட் இம்பார்டன்ஸ்!

எப்போ பார்த்தாலும் உனக்கு சாப்பாடு… அதுதான் உலகமே!”

அந்தச் சமயத்திலேயே, அவனது போன் அழைத்தது.

“ஓகே சார், ஐ வில் பி தேர் பை நைட்…” என்று யாரிடமோ சொல்லிக்கொண்டு, வெகுவேகமாகக் காரை நோக்கி நடந்தான்.

“விக்ரம்… ப்ளீஸ்! பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுப்பிறகு போங்க…,”

விக்ரம் தலையசைத்தான்.

“நோ… நோ! ஐ டோன்ட் ஹவ் டைம். நான் இப்போ பச்சைமலைக்குப் போகணும். ஒரு முக்கியமான பிசினஸ் கிளையன்ட்டை நைட்டுக்குள்ள சந்திக்கணும். ரோட்டில ஏதாவது எடுத்துக்கிட்டே போயிடுறேன்.”

விக்ரம் காரை எடுத்து, சாலையை நோக்கி பாய்ந்தான். மாலை நேரம் மெதுவாகக் கருகிக்கொண்டிருந்தது. மணி இரவு ஏழு தாண்டியது. வானம் சாமர்த்தியமான வண்ணங்கள் பூசப்பட்ட ஓவியம்போல் தெரிந்தது.

“பச்சைமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற போர்டு கண்களில் பட்டதும், சிறு குளிர் காற்று முகத்தில் வருடியது. அப்போதுதான் அவனுக்குப் பசிதாக்கம் தெரிந்தது.

“அடடா! காலையிலிருந்து ஒரு துண்டுகூட சாப்பிடலை மீட்டிங்கு… மீட்டிங்கு… என மறந்துட்டே வந்துட்டேனே!” என்று தன்னையே கேலி செய்துகொண்டான். சுற்றிலும் எங்கும் கண்காணித்தான். தொலை தூரம் வரையும் கடைகள் இருப்பதாகத் தெரியவில்லை.

காரின் பிளேயரில் மெதுவாகப் பாடலை இயக்கி, குளிர்ச்சியான காற்றில் மனதை இளைப்பாறச் செய்தான். அந்த நேரத்தில் ஜூம் கால் வந்தது.

“எஸ், மிஸ்டர் கலிவரதன், டெல் மீ…”

“சார், நீங்கள்தான் இந்த மீட்டிங் இன்வைட் செண்ட் பண்ணீங்களா?”

“யா… யா… இந்த மாதம் ப்ரொடக்டிவிட்டி கம்மி. ஏன்? பிரேக் நிறைய விடுறீங்க. பதினைந்து நிமிஷம் சாப்பாட்டுக்கு போதும் என்று சொல்லிடலாமா?"

இதையும் படியுங்கள்:
சிறுகதை: ரியல் லைக்ஸ்?
சிறுகதை | A injured man is eating in the marriage hall

"அது எப்படி சார்? மக்கள் பன்னிரண்டு மணிநேரம் வேலை பண்ணுறாங்க!”

விக்ரம் குரல் கடுமையடைந்தது:

“நோ… நோ! நமக்கு முக்கியமா இருக்குறது ப்ரொடக்டிவிட்டிதான். பிப்டீன் மினிட்ஸ் தான் லஞ்ச் பிரேக். எல்லாரும் ப்ரொடக்ஷன் ஸ்டார்ட் செய்யணும்.”

கலிவரதன் அமைதியாக இருந்தார்.

விக்ரம் கால் கட் செய்து, மீண்டும் பாட்டை ஆன் செய்தான். காற்றில் விசில் அடித்துக்கொண்டு, சுற்றுப்புற அழகை ரசித்தபடி காரை ஓட்டினான். ஆனால் பசி அவனை வாட்டத் தொடங்கியது…

“ஓ மை காட்… சாப்பிடாம கார்ல எவ்வளவு நேரமா வந்துட்டேன்!” என்று முணுமுணுத்தான். சுற்றிலும் தேடியபடி சென்றான். தூரத்தில் ஒரு டீக்கடை தெரிந்தது.

“சரி! குறைந்தது டீ பிஸ்கட் சாப்பிடலாமே!” என்று அவன் காரை நிறுத்தினான்.

“தம்பி… டீ இருக்கா?”

“இல்ல சார்… கடை கிளோஸ். மணி எட்டு ஆயிடுச்சு. இந்த இடம் இரவு ஆபத்தானது. கரடி, யானை எல்லாம் வரும்…” விக்ரமின் முகம் சுருங்கியது.

“சரி… மன்சூன் வைட் ரிசார்ட்டு எவ்வளவு தூரம்?”

“இன்னும் மேலே போகணும் சார். பதினைந்து கி.மீ. இருக்கும்,”

பசி விக்கிரமின் வயிற்றை இன்னும் நெருடியது.

“சரி… அங்கே கிளையன்ட்டை சந்திச்ச பிறகு, ரிசார்ட்டுல ஏதாவது சாப்பிடலாம்!” என்று வண்டியின் வேகத்தை அதிகரித்தான்.

ஆனால், விதி அவனுக்காக வேறு திட்டமிட்டிருந்தது.

அப்போது ஒரு வளைவில் திரும்ப முயற்சிக்கும்போது, திடீரென்று வண்டி பள்ளத்தை நோக்கி கவிழ்ந்தது. பள்ளத்தை நோக்கி கவிழ்ந்த வேகத்தில் வண்டி தீப்பிடிக்க ஆரம்பித்தது.

விக்ரம் வேகமாக கார் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பாய்ந்தான். அதற்குள் அவன் சட்டையிலும் பேன்ட்டிலும் தீப்பிடித்தது. இரண்டையும் கழற்றி, உடம்பில் படுவதற்குள் தூக்கி எறிந்துவிட்டான்.

பாய்ந்ததில் உருண்டு உருண்டு எங்கேயோ பாதாளத்திற்குள் விழுந்தான். விழுந்ததில் அவனுக்கு நல்ல அடிபட்டது. மெதுவாக ரத்தக் காயங்களோடு தள்ளாடி நின்று நிமிர்ந்து பார்த்தான். உயரமான தூரத்தில் அவனது வண்டி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

“அடடா! போன், லேப்டாப், இன்ன பிற ஐட்டங்கள் எல்லாமே எரிந்து விட்டதே…” இப்போது என்ன செய்வது? யாரை தொடர்புகொள்வது? என்று சுற்றிலும் முற்றிலும் பார்த்தான். ஒரே இருட்டாக இருந்தது.

“ஹெல்ப்… ஹெல்ப்…” என்று கத்தினான். ஏற்கனவே பசி அதிகமாக இருந்தது. உருண்டு உருண்டு விழுந்ததில் காயம் பட்டு, அவனுக்கு தண்ணீரும் வேண்டும் போல் இருந்தது.

“நா வறண்டு… தண்ணீர் கிடைக்குமா?” என்று சுற்றிலும் பார்த்தான். ஆனால், அவனுக்கு எதுவும் புலப்படவில்லை. சுற்றிலும் ஒரே இருட்டு. அவன் கத்திய சத்தத்தையும் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை.

தான் ஒரு அதல பாதாள இடத்தில் சிக்கிக்கொண்டதாக தெரிந்து கொண்டான். சுற்றிலும் முற்றிலும் பார்த்தான். அப்போது ஒரு சிறிய பாதை அவனுக்கு தென்பட்டது. எங்கோ தூரத்தில் ஒரு வெளிச்ச புள்ளி அவன் கண்ணில் பட்டது. அந்த வெளிச்ச புள்ளியை மையமாக வைத்து பாதையில் நடக்க ஆரம்பித்தான்.

“வெளிச்சப் புள்ளியை அடைந்தால், ஏதாவது ஒரு ஊரை அடைந்து விடலாம்” என்ற நம்பிக்கையில் அந்த வெளிச்சத்தை நோக்கிச் சென்றான். எவ்வளவு தூரம் நடந்தான் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தூரம் நடந்தான். தொடர்ந்து நடந்ததில் அவனுக்கு பசியும் தாகமும் அதிகமானது.

அப்போதுதான் கவனித்தான் – அரை நிர்வாண நிலையில் இருப்பதை. எங்கேயோ, யாரோ கிழித்துப் போட்ட ஒரு கையிலி, முள் செடிக்குள் மாட்டி காற்றில் பறந்துகொண்டிருந்தது. தன் மானம் காக்க அந்த கிழிந்த கையிலியை இடுப்பில் சுற்றிக்கொண்டான்.

சிறுகதை | A injured man walking in the forest
சிறுகதை | A injured man walking in the forestImage credit: Chatgpt

தொடர்ந்து நடந்துகொண்டிருந்ததில் அவனுக்குப் பசியும் தாகமும் அதிகமானது. தன்னிலை மறந்து, “பசி… பசி…” என்று பிதற்றிக்கொண்டே நடந்தான். பொழுது புலர்ந்து சூரியன் மெதுவாக எட்டிப் பார்த்தது.

அதே நேரத்தில் விக்ரம் அந்தச் சிறு கிராமத்தை அடைந்திருந்தான். அவனைப் பார்த்தவர்கள் அவனை ஒரு பைத்தியக்காரன்போலவே பார்த்தார்கள். உடல் முழுவதும் காயங்களால் நிரம்பியிருந்தது. முகத்தில் சோர்வும் துயரமும் தெரிந்தது. வாய் மட்டும் “பசி… பசி…” என்று இடைவிடாது முணுமுணுத்துக்கொண்டிருந்தது.

சிறு சிறு கடைகள் அவனது கண்களில் தென்பட்டன.

“ஐயா, கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? நான் மலையின் மேலே செல்லும் போது கீழே விழுந்துவிட்டேன்… நான் ஒரு பிஸினஸ் மேன்.

நீங்கள் எவ்வளவு கேட்டாலும் தருகிறேன். கொஞ்சம் தண்ணீரும் உணவும் தாருங்கள்…” என்று விக்ரம் கேட்டான். ஆனால், பார்த்தவர்கள் அவனைப் பார்த்து சிரித்தனர்.

“இந்த மாதிரி எத்தனை பைத்தியங்கள் நாங்கள் பார்த்திருக்கிறோம்! போடா… இல்லன்னா சுடு தண்ணி முகத்தில ஊத்திடுவேன்!” என்று விரட்டினார்கள்.

அருகிலிருந்த திருமண மண்டபத்திலிருந்து பாடல் சத்தம் கேட்டது.

“சரி… எப்படியாவது அந்த மண்டபத்துக்குள் நுழைந்து, ஒரு வாய் உணவையாவது உண்டுவிட்டால் சரியாகி விடுவேன்…” என்று நினைத்தான்.

மெதுவாக யாரும் அறியாமல் மண்டபத்துக்குள் நுழைய முற்பட்டான். அப்போது வாசலில் இருந்த காவலாளி,

“யாருடா அவன்? பைத்தியக்காரன்போல இருக்கானே! போடா வெளியே!” என்று விரட்டினான்.

மண்டப சமையலறை அருகில் நின்றபோது, உள்ளிருந்து வரும் சாம்பார், ரசம், பாயசம், வடை, இனிப்புகள், சாதம் ஆகிய உணவின் வாசனை அவன் பசியை இன்னும் அதிகப்படுத்தியது.

“எப்படியாவது சாப்பிட்டுவிட வேண்டும்…” என்ற வெறியோடு அவன் அங்கே நின்றான்.

அப்போது மண்டபத்தின் தலைமை சமையல்காரர் விக்ரமைக் கண்டார். காவலாளியிடம், “யாரப்பா இவன்?” என்று கேட்டார்.

“தெரியலைய்யா… பைத்தியக்காரன்போல சாப்பிடப் போய் உள்ளே நுழையான். அதனால்தான் விரட்டினேன்,” என்றார் காவலாளர்.

சமையல்காரர் அவனை பரிதாபமாகப் பார்த்து, “என்னப்பா?” என்று கேட்டார்.

“பசி… ரொம்ப பசிக்குது…” என்று விக்ரம் வயிற்றைத் தொட்டு காண்பித்தான்.

“சரி, இப்படியே இருக்கக்கூடாது. இரு…” என்று சொன்னார் சமையல்காரர். அவர் உள்ளிருந்து ஒரு காவி வேட்டியும் துண்டையும் கொண்டு வந்து கொடுத்தார்.

“இதைக் கட்டிக்கோ… மண்டபத்துக்குள் வா. முகத்தை அலம்பிக்கோ… சாப்பிடுறியா?” என்று கேட்டார்.

விக்ரம், “கொஞ்சம் தண்ணீர்… தாங்க முடியலை…” என்றான்.

அவர் தண்ணீர் கொடுத்தார். பிறகு, “சும்மா சாப்பிடக் கூடாது… கொஞ்சம் வேலை பண்ணிக்கிட்டு சாப்பிடு,” என்றார்.

விக்ரம் உடனே அங்கிருந்த வாளியை தூக்கிக்கொண்டு பரிமாற ஆரம்பித்தான்.

எப்போது எல்லோரும் சாப்பிட்டு முடிப்பார்கள். நான் எப்போது சாப்பிடுவேன் என்ற ஏக்கம் அவனை எரித்துக் கொண்டிருந்தது.

அவன் ஆர்வமாக சாம்பார் சாதம், ரசம் சாதம், உருளைக்கிழங்கு புட்டு, இனிப்பு பாயசம், வடை, ஜிலேபி ஆகியவற்றை சாப்பிடும் மக்களைப் பார்த்தான்.

அவர்களது கையால் உருண்டு உருண்டு சாப்பிடும் ஒவ்வொரு உருண்டையும் பார்த்தபோது, அவர்கள் எப்போது முடிப்பார்கள், நான் எப்போது சாப்பிடுவேன் என்ற ஏக்கம் அவனை மூச்சுவிட முடியாமல் செய்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சமையல்காரர்கள் சாப்பிட அமர்ந்தார்கள்.

விக்ரம் முதல் ஆளாக வந்து நன்றாக சாப்பிட்டான். ருசித்து ரசித்து ஒன்றையும் மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சாப்பிட்டான்.

எல்லோரும் கிளம்பிய பிறகு, மண்டபத்தின் வாயிலேயே உண்ட களைப்பும், வெகு தூரம் நடந்த களைப்பும் காரணமாக எப்படியோ அங்கேயே படுத்து தூங்கிப்போனான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: என் இரண்டாவது சித்தப்பா!
சிறுகதை | A injured man is eating in the marriage hall

கண் விழித்தபோது, காவலாளி வந்து, “அந்த சமையல்காரர் நீ செஞ்ச வேலைக்கு காசு கொடுக்கச் சொன்னார்” என்று கூறி, ஆயிரம் ரூபாயை விக்ரமிடம் தந்தார்.

அப்போதுதான் அவனுக்கு நினைவுக்கு வந்தது – “நான் யார்!” என்று.

“பக்கத்தில் ஏதாவது செல்போன் கடை இருக்கிறதா?” என்று கேட்டான்.

“கொஞ்சம் தூரத்தில் இருக்கு, இப்படியே போ” என்று காவலாளி சொன்னான்.

அவன் அங்கே போய், 500 ரூபாய்க்கு ஒரு செகன்ட் ஹேண்ட் போன் வாங்கிக்கொண்டான்.

அந்த போனைக் கொண்டு மேலாளர் கலிவரதனை அழைத்தான்.

“கலிவரதன், நான் விக்ரம் பேசுறேன்” என்றான்.

“சார்! எங்க இருக்கீங்க? ஏன் உங்க போன் நாட் ரீச்சபிள் இருக்கு? இது என்ன புது நம்பரா?” என்று கலிவரதன் கேட்டான்.

“அது ஒரு பெரிய கதை… சொல்றேன். நீ என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று விக்ரம் கேட்டான்.

சிறுகதை |  A man is speaking in phone
சிறுகதை | A man is speaking in phoneImage credit: Chatgpt

“சாப்பிட்டு இருக்கேன் சார்” என்று தயங்கித் தயங்கிப் பதிலளித்தான் கலிவரதன்.

“சரி சரி, சாப்பிட்டு கூப்பிடு. ஒன்னும் அவசரம் இல்லை” என்று விக்ரம் சொன்னான்.

கலிவரதனுக்கு வியப்பாக இருந்தது.

பின்னர், விக்ரம் தனது மனைவியின் நினைவுக்கு வந்தான். அவளது நம்பருக்கு போன் செய்து, “ஹாய், என்ன பண்ற?” என்று கேட்டான்.

“எங்க இருக்கீங்க? இது என்ன நம்பர் புதுசா இருக்கு?” என்று மனைவி கேட்டாள்.

“ஆமாம், புது நம்பர்தான்… நீ சாப்பிட்டாயா?” என்று அன்புகலந்த ஆர்வத்துடன் கேட்டான் விக்ரம்.

அவனது மனைவிக்கும் — விக்ரம் புதிதாகவே தோன்றினான்.