"வாக்கிங் போயிட்டு இதெல்லாம் சாப்பிட்டா எப்படீங்க?" - உங்க 'இதயம் பேசுகிறது'... கேளுங்க!

heart health awareness
heart health awarenessImage credit - AI image
Updated on

"ஹலோ…"

"யாருங்க பேசுறது?"

"ஹலோ! நான் தாங்க உங்க இதயம் பேசுறேன்."

"அடடா! நல்லா இருக்கீங்களா?"

"என்னங்க, நல்லா இருக்கிறதா? எப்படிங்க நல்லா இருக்கிறது?"

"ஏனுங்க, என்னாச்சு?"

"நீங்க பண்றது எல்லாத்தையும் பார்த்தா, நான் எப்படி நல்லா இருக்கேன்னு சொல்றது? சொல்லுங்க பார்க்கலாம். இது உங்களுக்கே நல்லா இருக்குதா? (heart health awareness)

போன மாதம் உங்க டாக்டர் சொன்னாருன்னு வேக வேகமா ஓடுனீங்க, நடந்தீங்க. நான் கூட நினைச்சேன் நீங்க பரவாயில்லை அப்படின்னு உங்களை பாராட்டினேன். ஆனா வாக்கிங் முடிச்ச கையோட நீங்க செஞ்ச வேலை இருக்கு பாருங்க. லபக் லபக்குன்னு நாலு வடை உள்ள தள்ளுறீங்க! சரி, போனா போகுதுன்னு பார்த்தா சூடா டீய வேற உள்ளே ஊத்திட்டு இருக்கிங்க.

அதோட விட்டீங்களா? அப்புறம் வீட்ல போனா உங்க அம்மா பூரி சுட்டு வச்சா டக்கு டக்குன்னு நாலு, ஐந்து சாப்பிடுறீங்க. உருளைக்கிழங்கு மசாலா வேற! இனி என்னென்ன பண்ணப் போறீங்கன்னு நினைச்சு நான் ரொம்ப பயந்துட்டேன்.

என்னங்க நினைச்சிட்டு இருக்கீங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்.

இதையும் படியுங்கள்:
"உடம்பு மட்டும் போதாது, இதுதான் ரகசியம்!" – Health secrets - wellness quotes
heart health awareness

எங்க கீழ் அபார்ட்மெண்ட்ல இருக்கிறவர் குடல்காரர். அவருக்கு கொழுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு அவர் வேற, நீங்க உள்ள தள்ளுறதுல தேவையானது எல்லாத்தையும் எடுத்துட்டு என்னுடைய வாசல்ல கொண்டு வந்து வேண்டாத எல்லா குப்பையையும் போட்டு அடைத்து வைத்துவிடுறார். அப்புறம் நான் எங்கங்க மூச்சு விடுறது? வெளியே வர்றது என் மூச்சு வெளியே வர மாட்டேங்குது. இப்படியே போனா சீக்கிரம் நான் பரலோகம் போயிட வேண்டியதுதான்!

தயவுசெய்து உங்க டாக்டர் சொல்ற மாதிரி நல்ல பழங்களை சாப்பிடுங்க. உங்க உடல் ஆரோக்கியத்தை பாத்துக்கோங்க. டப்பு டப்புன்னு ஓடாதீங்க. யாராவது ஏதாவது சொன்னா டக்குன்னு ரியாக்ட் பண்ணாதீங்க.

தூங்கி எழுந்தவுடன் டக்குன்னு எந்திரிச்சு நடக்காதீங்க சார். கொஞ்சம் உட்கார்ந்து நிதானமா நடங்க. மேல மேல கடையில ஆர்டர் போட்டு வாங்கி சாப்பிடாதீங்க சார்.

கொஞ்சமாவது என்மேல் கருணை காட்டுங்க. சந்தைக்கு போய் நல்ல காய்கறிகளை வாங்கி வந்து சாப்பிடுங்க சார்.

இப்படி பண்ணுனீங்கன்னா தான் நான் நல்லா இருப்பேன். நான் நல்லா இருந்தா தான் நீங்க நல்லா இருக்க முடியும். அதை நல்லா யோசிச்சுக்கோங்க, சரிங்களா?

ஸ்வீட் கடையில போய் ஸ்வீட் பிடிக்குதுன்னு சொல்லி வாங்கிட்டு வந்து வச்சு வச்சு சாப்பிட்டு தள்ளாதீங்க.

டாக்டர் குடுக்குற மருந்து மாத்திரைகளை மறக்காம அழகா சாப்பிடுங்க. சரியான நேரத்துல சாப்பாடு அளவா சாப்பிட்டு இருங்க.

உங்களுக்கு வயசு ஆயிடுச்சு. அதனால அதிக தூரம் பயணங்களை தனியா பண்ணாதீங்க, சரிங்களா? வெயில்ல போறதை தவிர்த்துடுங்க. எந்த பிரச்சனை வந்தாலும் மனசுக்குள்ள போட்டு குழப்பிக்காம நிம்மதியா இருங்க.

இதையும் படியுங்கள்:
காலையில் எழுந்ததும் நீங்கள் இதைச் செய்கிறீர்களா? - மாரடைப்பு வர இதுவே முக்கியக் காரணம்..!
heart health awareness

நீங்க ரொம்ப மூளைக்காரர். அதிகமா யோசிச்சுட்டே இருப்பீங்க. அதனால உங்க மூளைக்கும் ஓய்வு தேவை. உங்க உடம்புக்கும் ஓய்வு தேவை. கட்டாயம் எட்டு மணி நேரம் தூங்கி ஆகணும். நீங்க 50 வயசுக்கு மேல வேலைகளை கொஞ்சம் ஓரமா வச்சுருங்க.

வடைய சாப்பிடுறது, பூரி சாப்பிடுறது, அது எல்லாம் ஓகேங்க. ஆனா கடைசியா ஒரு வேலை பண்ணுறீங்க பாருங்க… அந்த வெள்ளையா ஒரு குச்சியை, அதாங்க சிகரெட், எடுத்து வாயில வைத்து ஊதுறீங்க. அதுல இருந்து ஒரு புகையை விஷவாயு மாதிரி என் வயிற்றுக்குள்ள தள்ளுறீங்க. அது என்ன பண்ணுது தெரியுமா? நான் மூச்சு விட வச்சிருக்கிற ஆக்ஸிஜனை திருடுது!

உங்களோட சர்க்கரை அளவுக்கு கரெக்டா மெயின்டெய்ன் பண்ணிக்கோங்க. இல்லையென்றால் அதுவுமே என் மூச்சு விடுவதை, என்னுடைய துடிப்பை காலி பண்ணிடும்.

முக்கியமா நீங்க செய்ய வேண்டியது வருஷத்துக்கு ஒரு தடவை என்னோட டாக்டரிடம் போய் பாருங்க. என்ன என்ன செய்யறது என்று செக் பண்ணுங்க. நான் நல்லா இருக்கேன்னானு நீங்க செக் பண்ணிக்கோங்க. அப்போதான் நீங்க நூற்றாண்டு வாழலாம்.

அப்புறம் பாத்தீங்கன்னா, உங்களுக்கு மீன் ரொம்ப நல்லது. மீன் சாப்பிடுவது எனக்கும் ரொம்ப நல்லது. அதில் நிறைய சக்திகள் இருக்கு. அதில் இருக்கிற ‘ஒமேகா 3’ என்னை நல்லா பாதுகாக்கும்.

முக்கியமா நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது நான் நல்லா இருந்தா தான் நீங்க நல்லா இருக்க முடியும். அதனால என் நலமே உங்கள் நலம்.

இதையும் படியுங்கள்:
அச்சுறுத்தும் உடல் பருமன்! உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறும் 'வயிற்றுத் தொப்பை'! தப்பிப்பது எப்படி?
heart health awareness

ஹலோ… எங்க போறீங்க? சரி சரி, போய் அப்பாயின்மென்ட் வாங்கி ஃபர்ஸ்ட் என்னை செக் பண்ணுங்க. டாக்டர் சொல்றதெல்லாம் நல்லா கடைபிடிங்க. அப்பத்தான் உங்க குடும்பத்தோட சந்தோஷமா வாழலாம்.

என் வாழ்க்கை உங்கள் கையில் தாங்க. உங்கள் வாழ்க்கை என் கையில். அதை மறந்துடாதீங்க.

அப்ப சரி, ஃபோன் வச்சுட்டுங்களா?"

logo
Kalki Online
kalkionline.com