Shivkar Bapuji Talpade 
கல்கி

முதன் முதலாக விமானம் ஓட்டியவர் ஓர் இந்தியர்! ரைட்டா, ராங்கா?

பிரபு சங்கர்

ரைட் தான்.

ரைட் தானா? அதாவது ரைட் சகோதரர்களா?

பதறாதீர்கள், பிரதர் அண்டு ஸிஸ்டர். உண்மை அதுதான். முதல் முதலாக விமானம் ஓட்டியவர், ஷிவாகர் தல்பாதே என்ற இந்தியர்தான்! தெரியுமா உங்களுக்கு?

இதென்ன டுபாக்கூரு? அமெரிக்காவின் ரைட் பிரதர்ஸ்தானே முதல் விமான ஓட்டிகள்/பயணிகள்?

அதுதான் இல்லை. 1895ம் ஆண்டே நம்ம ஷிவாகர் தல்பாதே விமானத்தைக் கண்டுபிடித்து விட்டார், தெரிஞ்சுக்கோங்க. இந்த விமானத்திற்கு மருட்சகா என்று அவர் பெயரும் வைத்தார். தன் கண்டுபிடிப்பை உலகுக்கு (அட்லீஸ்ட் மும்பைக்காவது) அறிமுகப்படுத்த விரும்பிய அவர், அதனை மும்பை சௌபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க விட்டார்.

இதைக் கண்டு ஊரே வியந்தது என்றால், ஊர் பிடிக்க வந்த ஆங்கிலேயர் வயிற்றில் பொறாமை அமிலத்தைச் சுரந்தது. 'ஆஃப்டர் ஆல் ஆன் இண்டியன், இவன் விமானம் கண்டு பிடிப்பதாவது? மின்சாரம், ரயில், அஞ்சலகம் என்று எல்லா கண்டுபிடிப்புகளும் நம்முடையதாகவே இருக்க இவன் யார் புதிதாகக் கண்டு பிடிக்க? அதுவும் விமானம்…‘ என்று பொருமினார்கள்.

அவ்வளவுதான் ஷிவாகர் தல்பாதேக்கு ஏகப்பட்ட குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார்கள். விமானத் தயாரிப்புக்கான செலவை நிதி திரட்டுவதன் மூலம் சரிகட்டலாம் என்று செயல்பட்ட அவருடைய முயற்சிகளுக்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டார்கள். ஆனாலும் அவருடைய திறமை மீது நம்பிக்கை வைத்தவர்கள் ஷிவாகருக்கு நிதி தரத்தான் செய்தார்கள். ரொம்பவும் ரகசியமாக(!) விமானத்தைத் தயாரித்தார் ஷிவாகர். அது நம் புராதன வ்யமானிக சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. அதை சௌபாத்தி கடற்கரைக்குக் கொண்டு சென்று, விண்ணில் வெற்றிகரமாகப் பறக்க விட்டார்.

இந்த சாதுர்யத்தை பிரிட்டிஷார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 'ஆஃப்டர் ஆல் இந்தியன்' என்ற அவர்களுடைய அலட்சியம் அவர்களையே குப்புறத் தள்ளியது. ஆனாலும் அவர் பெயர் தட்டிச் செல்ல எப்படி அனுமதிப்பது? ஆகவே, அந்த விமானத்தில் எரிபொருளாகப் பாதரசம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆகவே ஷிவாகர் பாதரசத்திலிருந்து வெடிகுண்டு தயாரித்தார் என்று பொய் வழக்கு போட்டு அவரைச் சிறையில் அடைத்தார்கள்.

பல ஆண்டுகள் சிறையில் கழித்த ஷிவாகர் வெளியே வந்ததும் மீண்டும் விமானத் தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அதற்குள் அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் தம் விமானத்தை விண்ணில் பறக்க விட்டிருந்தார்கள்! தன்னுடைய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்க வருத்தத்தில் 1916ம் ஆண்டு ஷிவாகர் விண்ணேகினார்.

அந்த காலகட்டத்தில் பாதரசத்தை விமான எரிபொருளாகப் பயன்படுத்தவே முடியாது என்றே பல விஞ்ஞானிகள் கருதியிருந்தார்கள். ஆனால் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா இன்றைக்கு தன் விண்கலங்களை இயக்க பாதரசத்தையும் பயன்படுத்துகிறது.

இந்த உண்மை தெரிந்த பிறகு, இப்போதாவது அப்பாவி இந்தியனான ஷிவாகர் தல்பதேக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து மரியாதை செலுத்த வேண்டாமா? ஹும்…

ஒரு நிமிஷம். இந்தத் தருணத்தில் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படமும் அந்தப் படத்தின் மையப் பொருளான டெக்கான் ஏர்லைன்ஸும் உங்கள் நினைவுக்கு வருகிறதா? கூடவே அந்த விமான நிறுவனத்தின் ஸ்தாபகரான, கேப்டன் கோருர் ராமஸ்வாமி ஐயங்கார் கோபிநாத் அவர்களின் பல அடையாளங்கள் மறைக்கப்பட்டதும், நூற்றுக்கு நூறு அவருக்கு முழு அங்கீகாரம் கொடுக்காததும் நினைவுக்கு வருமே…. ஹும்…

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

SCROLL FOR NEXT