சிறுகதை: சம்மதம்!

நவீன உறவுமுறைகள் மற்றும் பெண்ணின் சுயமரியாதையைப் பேசும் சிறுகதை
சிறுகதை | Woman and man are speaking
சிறுகதை | Woman and man are speaking Image credit: Chatgpt
சாய் பார்கவி

சாய் பார்கவி, சென்னையில் வசிக்கிறேன். நான் முதுகலை பட்டம் பெற்றவர். எனக்கு கதைகளை படிக்க பிடிக்கும். அதேப்போல் எனக்கு சிறுகதைகள் எழுத பிடிக்கும் அதற்கான முயற்சிகளை இப்பொழுது செய்து வருகிறேன். படிக்கும் வாசகர்களுக்கு என் படைப்புகள் சிந்திக்கவும் மற்றும் சிரிக்கவும் வைக்கும். இதை தவிர சில கவிதைகள் எழுதுவேன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்.

Updated on: 
MM strip
MM strip

ஒரு மாலைப் பொழுது. ரம்மியமான இசை காற்றில் கலந்து, அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய மனநிலைக்கேற்ப அந்த ரம்மியமான சூழ்நிலையை ரசித்து, சிரித்து, பேசி மகிழ்ந்துகொண்டிருந்தனர். அது ஒரு உயர்தர லவ்வர்ஸ் ரெஸ்டாரென்ட். அங்கு ஒரு உணவு மேஜையில் இருவர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“என்ன காவியா? வந்ததுல இருந்து என்னையே பார்த்துட்டு இருக்க, எதுவும் பேசாம இருக்குற? ஜூஸை குடி. நான் உன்னை எதுக்கு கூப்பிட்டு இருக்கேன் தெரியும்ல? உன் பதிலை சொல்லு காவியா.”

“ஒன்னும் இல்ல விஷால். உன்கூட ஏன் பேச ஆரம்பிச்சேன்னு யோசிச்சேன், அதான் பழைய நியாபகத்துக்குள்ள போயிட்டேன்.”

“ஆமா, ஒரே ஆபீஸ்ல வேலை பார்த்தாலும் இந்த நாலு வருஷத்துல எண்ணி மூணு இல்லனா நாலு வாட்டிதான் பேசுன. நான் கூட நீ கொஞ்சம் திமிரு புடிச்ச பொண்ணுன்னு நினைச்சேன். ஆனா நீ கடந்த சில மாசமா என்கிட்ட பேசுனவிதம் எனக்கு உன்னைப் பார்த்து வியப்பா இருந்துச்சு.”

“காவியா, ஒரு உண்மைய சொல்லவா? உன்கிட்ட பேசி பழகிய பின்தான் என் மனசு சொன்ன விஷயம், ‘என்ன பொண்ணுடா இவ’ அந்த ஃபீல் குடுத்துச்சு எனக்கு.”

“ஹா ஹா ஹா... விஷால், உன் காமெடிக்கு அளவே இல்ல.”

“உண்மையதான் சொல்றேன் காவியா.”

“ஹா ஹா ஹா...”

“காவியா, பீ சீரியஸ்.”

“சரி, இப்போ உன் பதிலைச் சொல்லு. நீ எப்பவும் சொல்லுவ, உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு. அப்போ நான் கேட்குறதுக்கு ஏன் உன்னோட சம்மதத்த சொல்ல மாட்டேங்குற?”

“என்ன சொல்லணும்னு நினைக்கிற விஷால்?”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வலை!
சிறுகதை | Woman and man are speaking

“எனக்குத் தேவை உன்னோட சம்மதம் காவியா.”

“உனக்கு ஏன் என்ன பிடிக்கும் விஷால்?”

“நீ ரொம்ப ஃப்ரண்ட்லியான பொண்ணு. அப்புறம் எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற, ரொம்ப சப்போர்ட்டிவா இருக்க காவியா.”

“அப்புறம் வேற விஷால்?”

“நீ ஒரு பிராக்டிகலான பொண்ணு காவியா. அப்புறம் உனக்கு பிடிச்சதை நீ செய்ற.”

“உன்னை ஏன் எனக்கு பிடிக்கும் தெரியுமா விஷால்?”

“தெரியாது காவியா.”

“லாஸ்ட் இயர் நம்ம கம்பெனி மேகஸின்ல நீ எழுதின ஆர்டிகல் படிச்சேன் விஷால். அதுல பெண்களுக்கான சுயமரியாதை, சுய சிந்தனை, அவங்க எப்படி எல்லாம் ஒர்க்ல முன்னேறணும், இந்த சமுதாயத்தில் அவர்கள் ரொம்ப தைரியமா இருக்கணும், எதுக்கும் அவங்க பயப்படக்கூடாது, பயம் அவங்களுக்கு பலவீனமா இருக்கக்கூடாது... இதை அவ்வளவு அழகாவும், தெள்ளத் தெளிவாகவும் நீ எழுதிருந்த.

அந்த ஆர்டிகலை படிக்கும்போது நான் ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டேன். அதனாலதான் உன்கிட்ட பேசினேன். உன்னுடைய எழுத்துக்களை விரும்புனேன். உன் எழுத்துக்களால்தான் உன்னை எனக்கு பிடிச்சது.”

“காவியா, அப்போ உனக்கு என்னைவிட என் எழுத்துக்களைத்தான் பிடிச்சிருக்கா?”

“விஷால், உன்னையும் பிடிக்கும், உன் எழுத்துக்களையும் பிடிக்கும். உன்னுடைய எழுத்துக்கள்தான் உன்னைப் பிடிக்க காரணம்.”

“காவியா, அப்போ என்னை பிடிக்கும்தானே?”

“ஆமா விஷால், இதுல என்ன டவுட் உனக்கு? உன்னை பிடிக்கும். நீ எனக்கு ஒரு நல்ல நண்பன். இதை நான் நிறைய தடவை சொல்லிட்டேன் உன்கிட்ட. இத ஒரு வாட்டி, ரெண்டு வாட்டி சொல்லல. நீ எனக்கு ஒரு நம்பிக்கையான நல்ல நண்பன். அதனால எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.”

“காவியா, அப்போ சம்மதிக்கிறதுக்கு என்ன பிரச்னை உனக்கு?”

“நீ கேட்கிற விஷயம்தான் பிரச்னை. நீ கேக்குற விஷயம் என்னால அக்செப்ட் பண்ண முடியாது விஷால், அத புரிஞ்சுக்கோ. இத உங்கிட்ட நான் ஆறு, ஏழு மாசமா சொல்லிட்டேதான் இருக்கேன். ஆனா நீதான் கேட்க மாட்டேங்கற. நீ கேட்குறது அபத்தமான விஷயம். எனக்கு அதுல விருப்பம் இல்ல. உண்மைய சொல்லணும்னா, நீ கேட்ட விஷயம் பிடிக்கல.”

“ஏன் பிடிக்கல காவியா? இதுவும் ஒருவகையில ரிலேஷன்ஷிப்தான். ”

சிறுகதை | Woman and man are speaking
சிறுகதை | Woman and man are speakingImage credit: Gemini AI

“நிறுத்து விஷால்! நான் ஒன்னும் குழந்தை இல்ல, இது ஒன்னும் ரிலேஷன்ஷிப்பும் இல்ல. இதுக்கு பேரு ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட். அதை நம்ம ஃப்ரெண்ட்ஷிப்குள்ள கொண்டு வராத.”

“ஆனா காவியா, நீயே பிராக்டிகலான பொண்ணு. லாஸ்ட் டைம் திவ்யா அண்ட் கார்த்தி இது மாதிரி பண்ணபோது, நீ கூட அதுக்கு அப்போஸ் பண்ணவே இல்லையே. இதெல்லாம் நம் சமுதாயத்தில் நடக்கிற பொதுவான விஷயங்கள் சொன்னியே. அப்போ இப்ப மட்டும் ஏன் இதை ஏத்துக்க மாட்டேங்குற?”

“ஆமா விஷால், சொன்னேன்தான். ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ விஷால். ஆமா, நான் பிராக்டிகலான பொண்ணுதான்.

அந்த பிராக்டிகல் எதுக்கு தெரியுமா? ஒருத்தங்க செய்ற விஷயம், அவங்களோட சிச்சுவேஷன நான் புரிஞ்சுப்பேன். அவங்க எதனால இந்தத் தப்பை செய்றாங்கனும் நான் புரிஞ்சிப்பேன். எந்த மாதிரியான சூழ்நிலையில இந்தத் தவறு நடந்துச்சுனு நான் புரிஞ்சிப்பேன்.

அந்தக் காலத்து பழமைவாதி நான் இல்ல. இந்தக் காலத்துல நடக்குற விஷயங்கள நான் புரிஞ்சுக்கிறேன், அவ்வளவுதான். அவங்ககிட்ட போயிட்டு ஒருவனுக்கு ஒருத்தியாதான் இருக்கணும், சட்ட திட்டங்களோட இருக்கணும், ஒரு வரமுறையோடு நடக்கணும்னு சொல்லிட்டு நான் பாடம் எடுக்கமாட்டேன். ஏன்னா, இது அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல போய் நான் தலையிட மாட்டேன்.

ஆனா அதுக்காக நானும் இப்படித்தான் இருப்பேன்னு அர்த்தம் கிடையாது. எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. அதன்படிதான் நான் நடப்பேன் விஷால்.

நீ ஒன்னும் என்ன மேரேஜ்க்கு ப்ரபோஸ் பண்ணல. இது ஜஸ்ட் உனக்கு டைம் பாஸ், அதுக்காக நீ கேட்கற. நீயும் தெளிவா சொல்லிட்ட, எதிர்காலத்துல மேரேஜ் வேற பொண்ணுகூட. அப்ப அந்த பொண்ணு கூட சந்தோஷமா இரு. அது போதும். எதுக்கு இன்னொரு பொண்ணு?

ஒருவேளை நீ கல்யாணத்துக்காக ப்ரொபோஸ் பண்ணிருந்தாகூட, நான் சம்மதம் சொல்லியிருப்பேனானு டவுட்டுதான்.

என் லைஃப் பார்ட்னர் எப்படி இருக்கணும்னு எனக்கு ஒரு எண்ணம் இருக்கு. அது உனக்கு செட் ஆகுமான்னு நான் யோசிச்சு பார்ப்பேன்.

விஷால், இப்ப இருக்குற ஆண், பெண்ணோட மனநிலை என்ன தெரியுமா? சில பேருக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தங்களோட இருக்கிறாங்க. கல்யாணத்துக்கு அவர்கள் வேறொரு நபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதுதான் நடக்குது. இது எல்லாரும் பண்றாங்கன்னு அர்த்தம் கிடையாது. சில ஆண்கள், பெண்கள் மட்டுமேதான் இப்படி இருக்காங்க.”

“வாட் இஸ் திஸ் காவியா? பாட்டி மாதிரி பேசிட்டு இருக்க? நீ ரியாலிட்டிக்கு வா. இதெல்லாம் சர்வ சாதாரணம். இது என்னமோ கொலைக் குற்றம் மாதிரி நீ பேசிட்டு இருக்க?”

இதையும் படியுங்கள்:
சிறுகதை: சுய கெளரவம்!
சிறுகதை | Woman and man are speaking

“ஆமா விஷால், இது சாதாரண விஷயம்தான். இத நான் வந்து தப்புன்னு சொல்லல. ஆனா எனக்கு இதுல விருப்பம் இல்லை. என் விருப்பத்தை மீறி யாரும் என்ன கட்டாயப்படுத்தக் கூடாது.

நீ ஒன்னும் உன்னைக் கல்யாணம் பண்ணி, உன் கேரியருக்கு சப்போர்ட் பண்ண சொல்லல. உன்கூட கட்டில ஒண்ணா இருக்க சப்போர்ட் பண்ண சொல்ற.

ஒரு பெண் அந்த நைட் அவ யாரு கூட இருக்கணும் நினைக்கிறாளோ, அது அவளோட விருப்பமும், சுதந்திரமும்.

சோ, நோ மீன்ஸ் நோ. உன்கூட இருக்க விருப்பமில்லை.”

“சரி காவியா, உன் டிசிஷன நீ ஸ்ட்ராங்கா சொல்லிட்ட. அப்புறம் நான் சொல்றத நீ கேளு.”

“சொல்லு விஷால்.”

“இனி நான் உன்கூட பேச மாட்டேன் காவியா.”

“எதனால தெரிஞ்சிக்கலாமா விஷால்?”

“உன்கூட என்னால சகஜமா பேச முடியாது. உன்ன பார்க்கும்போது எல்லாம் என்னை நீ ரிஜெக்ட் பண்ணதுதான் ஞாபகம் வரும் காவியா. அதே மாதிரி உன் நம்பர நான் ப்ளாக் பண்ணிடுறேன். இனி என்னோட போட்டோ எதுவுமே உனக்கு காமிக்காது.”

“சரி விஷால், உன் விருப்பம். ஒரு நாள் நீ புரிஞ்சிப்ப. அன்னைக்கு நீ பேசணும் நினைச்சா எனக்கு மெசேஜ் பண்ணு. கண்டிப்பா உன்கிட்ட நான் பேசுவேன், உன்ன ஒரு நல்ல நண்பனா நினைச்சு. அதுவரைக்கும் குட் பை.”