சிறுகதை: இதுதான்டா தீபாவளி!

Family celebration
Tamil story
Published on
mangayar malar strip
mangayar malar strip

“பிரேமி ஏதோ போன் வந்துச்சு போலிருக்கே?”

“நம்ம மகதான் பேசினாங்க...”

“என்னவாம்?” – கேட்டார் சபேசன்.

“ஒரே பொண்ணு. செல்லமா வளர்த்தோம். பெரிய இடத்து வரன் வந்துச்சு. புரோக்கரும் இதை விட்டுறாதீங்க. உங்க பொண்ணு அழகுக்குத்தான் அவங்களே வர்றாங்க. இல்லாட்டி அவங்களுக்கு இருக்கிற சொத்துக்கு அத்தை மகளுக, மாமன் மகளுகனு போட்டி போட்டு வர்றாங்களாம். உடனே ‘சரி’ன்னு சொல்லி ஒத்துக்கிடுங்கன்னு சொன்னாருல்ல...”

“ஆமாம். நாமளும் போய் விசாரிச்சோம். கிராமத்துல பெரிய மிராசுதார் குடும்பம். மூணு ஆம்பிளப் பசங்க. இரண்டு பேருக்குப் பெரிய இடத்துல பெண் எடுத்து கட்டி வெச்சிட்டாங்க. நம்ம மகளைத்தான் மூணாவது மகனுக்கு பார்க்கிறாங்கன்னும் புரிஞ்சிச்சு. நம்ம மகள் அழகுல அந்தப் பையன் மயங்கி, "கட்டிக்கிட்டா இவளைத்தான் கட்டிப்பேன்"னு ஒத்தக்காலில நிற்க, மிராசும் அதுக்கு ஒத்துக்கிட்டாரு.

நான் சாதாரண சூப்பர் மார்க்கெட்டில் கணக்கு எழுதற கணக்கன். மொதல்ல ரொம்ப அஞ்சினேன். நீதான் இந்த இடத்தை விடாதீங்கன்னு கட்டாயப்படுத்தினே...

ஆனா புரோக்கர் சொன்னாரு. ஐம்பது பவுன் போடணும். மத்த இரண்டு மருமகளும் அவ்வளவு போட்டிருக்காங்க. இது ஒண்ணுதான் நிபந்தனை. வேறு எதுவும் அதிகமா செய்ய வேணாம். கல்யாணச் செலவைத் தவிரன்னும் சொன்னாரு. நான் எங்கய்யா ஐம்பது பவுனுக்குப் போறது? இப்ப பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?ன்னேன்.

இதையும் படியுங்கள்:
தூக்கக் குறைபாடு உள்ள பெண்ணா நீங்க? அலட்சியம் வேண்டாம்!
Family celebration

அதுக்கும் அவர் பதில் வெச்சிருந்தாரு. மொதல்ல ஒரு இருபது போடுங்க. நிச்சயதார்த்தம்போது ஒரு பத்தும் திருமணத்துக்கு முதல் நாள் ஒரு பத்துபவுனும் போடுங்கன்னு சொன்னாரு. எப்படியோ உன் நகையை வித்து, உன் அண்ணன், தம்பிகள்கிட்ட கடன் வாங்கி இருபது பவுனும் நிச்சயதார்த்தம்போது பத்து பவுனும் போட்டோம்.

ஆனா கல்யாணத்துபோது அவங்க கேட்ட பத்து பவுன் நகையைப் போடமுடியலே. எப்படியோ கொஞ்ச நாளில போட்டுருவோம்னு நான் சொன்ன உறுதியை வெச்சு கல்யாணத்தை முடிச்சிட்டோம். இப்ப அந்தப் பத்து பவுன் பாக்கி நிக்குது...” என்றார் மூச்சு இரைக்க சபேசன்...

“ஏங்க இப்ப தலை தீபாவளி வர்றதே. அதுக்கு மாப்பிளைக்கு ஒரு செயின், கைக்கு மோதிரம் போடவேணாமா? அதையும் கணக்குல சேர்த்துக்குங்க. இப்ப உங்க மக என்ன சொன்னா தெரியுமா…?

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பைத்தியம்!
Family celebration

“கவிதா என்ன சொன்னா பிரேமி?”

“சொல்லலீங்க. அழுதா. அப்படி அழுதா. அவளுடைய மத்த ஓர்படிகள் எல்லாம் இவளை அந்தக் கிண்டல் செய்யறாங்களாம். அவங்கள் எல்லாம் பெரிய இடம். நாமதானுங்களே ரொம்ப ஏழ்மைப்பட்ட இடம்.

ஒருத்தி சொல்றாளாம் ‘நம்ம கடைசி மைத்துனருக்கு தலை தீபாவளியாக்கும். கவிதா அசத்திடும். ஆமாம்... வைர மோதிரம்தான் போடுவாங்க’ன்னு சொல்ல... அடுத்தவ ‘ஏன் அப்ப வெறும் கழுத்தோடயா மாப்பிள்ளையை அனுப்புவாங்க. ஒரு ஐந்து பவுன் மைனர் செயின் போட்டுத்தான் அனுப்புவாங்க’ன்னு கிண்டல் அடிக்கிறாளாம்.”

சபேசன் பேசவில்லை. அழுதார்.

“ஏங்க அழறீங்க? தெரியாமலா சொன்னாங்க. விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும்னுட்டு. நாம செய்த தப்புக்கு தினம் தினம் கவிதாதான் கஷ்டப்படுது” தாய் பிரேமியும் அழுதாள்.

“ஒரு முடிவு இப்பவே கட்டிடறேன்” - சபேசன்

“அய்யோ என்ன செய்யப்போறீங்க?”

இதையும் படியுங்கள்:
வலி!
Family celebration

“இது ஒண்ணுதான் கடைசி வழி. அதைத்தான் செய்யப்போறேன். நீ எதுவும் கேட்காதேன்னு” கூறி ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் மனம் உருகி அழுது புலம்பியபடி மாப்பிள்ளையிடம் மன்னிப்பும் தன் இயலாமையையும் எழுதி, தான் சாவதற்குள் எது முடியுமோ அதை செய்துவிடுகிறேன் என்ற உறுதியும் கொடுத்து எழுதி அதை மாப்பிள்ளை அலுவலகத்துக்கு ‘பர்சனல்’ என்று கொட்டை எழுத்தில் போட்டு கூரியரும் செய்துவிட்டார்.

மாப்பிள்ளையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பே மாப்பிள்ளை தன் அழகிய மனைவி கவிதாவை அழைத்துக்கொண்டு வந்தான்.

வாயால் நல்ல உபசரிப்பு செய்தனர் சபேசனும் பிரேமியும்.

சிறிது ஓய்வு. கவிதா அம்மாவைக் கட்டி ஆனந்த கண்ணீர் வடிக்க, தன் இயலாமையை நினைத்து தாய் உண்மையில் கண்ணீர் வடித்தாள். பின் இருவரும் பேசிக்கொண்டிருக்க...

சபேசன் ஒன்றும் தோணாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தபடி இருந்தார்.

“மாப்பிள்ளை…” மெல்ல அழைத்தார் சபேசன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

இதையும் படியுங்கள்:
குட்டிக் கதை: பசுமை நிறைந்த நினைவுகள்!
Family celebration

“ம். என்ன மாமா?”

“தீபாவளிக்கு வேஷ்டி துண்டு, பெண்ணுக்குப் புடவை எடுத்தாச்சு...”

“சரி. நீங்க என்ன சொல்ல வர்றீங்க மாமா?”

“தலை தீபாவளி. மாப்பிளைக்கு ஏதாச்சும் போடணும்னு சொல்லுவாங்க...”

“நீங்கதான் எல்லாமே லெட்டர் மூலமா எழுதிட்டீங்களே...”

“அப்ப படிச்சிட்டீங்களா?”

“ஓ. பதில்தான் போடலே.”

“அதுதான் எனக்கு ஒரு அச்சமா போயிடுத்து.”

“எதுக்கு அச்சம்?”

“பதில் ஒரு ஆறுதலா வரலியே... அதனால கோபமா இருக்குமோன்னு நாங்க பயந்துட்டே இருக்கோம்.”

“தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாள் இருக்கில்ல. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்களேன்.”

“இருந்தாலும்… “

“சரி சொல்ல வர்றதை முழுமையாச் சொல்லிடுங்க மாமா...”

“தலை தீபாவளிக்கு மாப்பிளைக்கு மோதிரம், மைனர் செயினும் போடணும். வசதியான சிலர் கைக்கு பிரேஸ்லெட்டும் போடுவாங்க...”

“ஆமாம். இதெல்லாம் நடைமுறை வழக்கம் மாமா...”

சபேசனுக்கு நெஞ்சைப் பிசைந்தது. அப்ப நம்ம மருமகன் இதெல்லாம் எதிர் பார்க்கிறாரு என்று அஞ்சி இரு கைகளையும் கூப்பி ஏதோ வாய் முணுமுணுக்க ஆரம்பித்ததும் அவன் வேகமாக எழுந்தான். கூப்பியக் கரங்களை விடுவித்தான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காணாமலே வந்த காதல்
Family celebration

“கவிதா இங்க வா” என்றான். “என்னங்க?” என்றபடி ஓடி வந்தாள் கவிதா.

சபேசன் பிரமை பிடித்து நிற்க, பிரேமி இரு கைகளையும் கட்டியபடி நின்றிருந்தாள்.

“மனசு பாரமா இருக்கு கவிதா. நாம கொஞ்சம் வெளியில போயிட்டு வருவோமா?”

“ஓ. வாங்க போவோம்...”

இருவரும் விடைபெற்று வெளியில் சென்றுவிட்டனர்.

வரும்போது கவிதா, தான் செய்ய வேண்டி லட்டுக்கான சாமான்கள் மற்றும் காரத்துக்கு தன் கணவருக்கு பிடித்த ரிப்பன் பக்கோடாவுக்கு தேவையான சாமான்களை வாங்கிவந்து அன்று இரவே லட்டும் செய்து ரிப்பன் பகோடாவும் செய்துவிட்டாள். முழுக்க முழுக்க கூட இருந்து உதவியவன் அவள் கணவன்தானே ஒழிய அம்மா இல்லை. அம்மாவை வரவேண்டாம். தான் செய்து பழகிப்பதாக கூறவும் பிரேமியும் அவளைச் சுதந்திரமாக விட்டாள்.

மறுநாள் தீபாவளி.

அனைவரும் எண்ணெய் ஸ்நானம் செய்து இறை வழிபாடு முடித்து கவிதாவும் அவள் கணவனும் தன் பெற்றோர்களை நமஸ்கரித்து ஆசி வாங்கினர்.

இதையும் படியுங்கள்:
தமிழ்த் திருமணத்தின் மங்கலச் சின்னம் கூறைப் புடவை... பட்டுப் புடவையாக இருக்க வேண்டுமா?
Family celebration

“அப்பா மோதிரம்…” என்று கவிதா கூறவும்...

“அய்யோ அதுதான் நான் எழுதிவிட்டேனே” என்றார் சபேசன்.

“அத்தை கழுத்துக்குச் செயின்” என்று கேட்கவும் பிரேமி நடுநடுங்கி தன் கணவரை கலங்கிய கண்களுடன் ஒரு பீதியோடு பார்த்தாள்.

உடன் ஓடினார் சபேசன். பெட்டியைத் திறந்தார். இரண்டு ஐநூறு நோட்டுக்களை எடுத்தார்.

“பிரேமி, நீயும் நானும் போயி ஒரு தட்டுல வெற்றிலை பாக்கு புஷ்பம் மற்றும் இந்த இரு ஐநூறு நோட்டுக்களையும் நம் பெண் மாப்பிள்ளைக்கு கொடுத்து, அவர் இன்னும் ஏதாவது கேட்கும்முன் நாம் விழுந்து வணங்கிடுவோம்” என்றதும், பிரேமியும் உடனே ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, புஷ்பம், இரு ஐநூறு நோட்டுகளை வைத்து, வாழ்த்துவதற்கு தயார் செய்தாள்.

இதையும் படியுங்கள்:
காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை! செய்யாத தவறுக்கு பழி!
Family celebration

“மாப்பிள்ளை – கவிதா... எங்களால முடிந்தது இவ்வளவுதான்னு” அழுதபடி கூறி கீழே விழும் சமயம் மாப்பிள்ளை சபேசனை தாங்கிப் பிடித்தான். கவிதா தாயைத் தாங்கி நிறுத்தினாள்.

“மாமா தலை தீபாவளிக்குப் பரிசு கொடுக்கணும்தான். அது ஒரு பக்கமா இருக்கக்கூடாது இல்லையா... ரெண்டு பக்கமும் இருக்கணும்” என்றவன் “கவிதா எடுத்து வாயேன்...” என்றான்.

“இதோ வர்றேங்க...” என்று ஓடியவள் அவர்கள் வாங்கிய பெரும் தட்டில் மஞ்சள், குங்குமம், புஷ்பம் மற்றும் வெற்றிலை பாக்கு வைத்து முதலில் தாய்க்கு தங்கள் பரிசை இருவரும் வழங்கும்போது தன் பேண்ட் பையில் இருந்த ஒரு சிறு பெட்டியை அதில் வைத்துக் கொடுத்தான் மருமகன்.

உடனே அதே தட்டை வாங்கி அதில் செவ்வாழை ஒரு சீப் வைத்து வெற்றிலை பாக்குடன் ஒரு சிறு பெட்டியும் வைத்து கவிதாவும் அவள் அன்பு கணவனும் சபேசனுக்கு கொடுக்க தாய் தந்தையர் அதை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

இதையும் படியுங்கள்:
கொசு 'O' குரூப் ரத்தம் கொண்டவர்களை மட்டுமே கடிக்குமா?
Family celebration

பிரேமி பெட்டியைப் பிரித்தாள். அதில் ஐந்து பவுனுக்குச் செயின் இருந்தது. அதிர்ச்சி மற்றும் பேரானந்தத்துடன் இதெல்லாம் உண்மையா? நாம் இருப்பது பூமியா? இல்லை கனவு உலகிலா? என்று தன்னை மறந்து நின்றபோது... கவிதாவே தாய் கழுத்தில் அதை அணிந்துவிட, மருமகன் கைகளைத் தட்டி பெரும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான்.

அதேபோல் சபேசன் தன் பெட்டியை திறந்தார். அவர் கண்கள் கூசின. ஆம் வைர மோதிரம்தான் அதில் இருந்தது. மருமகனே தன் கையால் மாமாவுக்கு வைர மோதிரத்தை விரலில் போட்டு அழகு பார்த்தபின், இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினர்.

ஆசியின்போது அட்சதையும் மலர்களையும் தூவினாலும் பெற்றவர்களின் ஆனந்த கண்ணீர் துளிகள்தான் கவிதாவையும் அவள் கணவனையும் ஆசிர்வதித்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: உள்ளம் என்பது ஆமை...
Family celebration

“மாமா இது எங்கள் தீபாவளி பரிசு. இப்ப உங்ககிட்ட ஒண்ணு சொல்லிடறேன். கவிதா என் அண்ணிகள் இரண்டு பேரிடமும் அத்தனை கஷ்டப்பட்டிருக்கிறாள். பெரிய இடத்துப் பெண்கள் அவர்கள் ஆனதால் என் அப்பாவும் அம்மாவும் எதுவும் கண்டுக்கொள்வதில்லை. அண்ணன்களும் தங்கள் தங்கள் மனைவியின் செல்வத்தில் அத்தனை பெருமை கொண்டிருந்தனர்.

கவிதா திருமணம் ஆகி வந்ததில் இருந்து குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் என் அண்ணிகள் கொடுத்து இவள் ஓடாய் உழைக்க, முழுக்க முழுக்க வாழ்வை என்ஜாய் செய்தனர் என் அண்ணிகள். ஆனால் ஒருநாள்கூட கவிதா முகத்தைக் காட்டியதில்லை. உங்களிடமும் அதுபற்றி புகார் கொடுத்ததும் இல்லை. இதுதான் உங்கள் அருமையான வளர்ப்பு. அதற்காகவே நீங்கள் எனக்கு கவிதாவைத் தந்ததற்கு, உங்களுக்கு வைர மோதிரமும், அத்தைக்கு ஐந்து பவுனுக்கு செயினும் போட்டேன். இது சிறு பரிசுதான். நீங்கள் எனக்கு கொடுத்த கவிதாவுக்கு ஈடாக எதுவுமே என்னால் போடமுடியாது மாமா. என்னை மன்னித்து விடுங்கள்...” என்று கூறி மீண்டும் கவிதாவுடன் அவர்கள் காலில் விழ இந்த முறை உரக்கவே அழுதுவிட்டார்கள் சபேசனும் பிரேமியும்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: அய்யோ! அட ராமா!
Family celebration

“மாமா இனிமேல் நீங்கள் கவிதா பற்றி எந்தக் கவலையும் படவேண்டாம். நான் வேலை செய்யும் கம்பெனி பூனேயில் இருக்கிறது. அங்கு என் வேலையை மாற்றிக்கொண்டு விட்டேன். அடுத்த மாதம் கவிதாவுடன் நான் பூனே சென்றுவிடுவேன். இனி நாங்கள் தனிக்குடித்தனம்தான். நீங்கள் அடிக்கடி வரணும். உடல் நலமில்லாது போனால் எங்களுடனேயே இருக்கலாம். அதற்கும் யோசிக்க வேண்டாம்” என்றதும் மீண்டும் சிறு அழுகைகள் பரிமாறப்பட்டன.

ஒரு வழியாக தீபாவளி முடிந்து ஊர் செல்லும் சமயம் ஒரு அசரீரி குரல் கேட்டது.

‘பலே பலே... இந்தத் தீபாவளியைத்தான்டா நான் கண்ணனிடம் வேண்டினேன். இதுதான்டா தீபாவளி. இதுதான் உண்மையான தலைதீபாவளி. இன்றுதான் நான் கண்ணனிடம் வேண்டிய வரம் முழுமையாக பலித்தது’ என்ற நரகாசுரனின் அசுர குரல் ஓங்கி வானில் கேட்கும் அளவுக்கு ஒலித்தது.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com